ஹோலி பண்டிகை: வெளிப்புற நோயாளிகள் பிரிவு மார்ச் 14-ல்  இயங்காது – ஜிப்மர் அறிவிப்பு | JIPMERs outpatient department will not function on the 14th due to Holi festival

1353898.jpg
Spread the love

புதுச்சேரி: ஹோலி பண்டிகையொட்டி ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு வரும் 14-ல் இயங்காது என்று ஜிப்மர் அறிவித்துள்ளது.

புதுவை ஜிப்மர் இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மத்திய அரசு விடுமுறை தினமான வரும் 14-ம் தேதி ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். எனினும் அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரி ஜிப்மருக்கு புதுச்சேரி மட்டுமில்லாமல் விழுப்புரம்,கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை உட்பட பல ஊர்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இதுபற்றி நோயாளிகள் பலரும் கூறுகையில், “ஜிப்மரில் தற்போது வெளிப்புற சிகிச்சைப்பிரிவுக்கு அடிக்கடி விடுமுறை விடுகிறார்கள். இதற்கு வடமாநில பண்டிகைகளை காரணம் தெரிவிக்கிறார்கள். இதனால் இங்குள்ளோர்தான் தவிக்கிறோம்.

ஜிப்மரில் அடிக்கடி மத்திய விடுமுறை நாட்களில் எல்லாம் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது என்று அறிவிப்பதை தவிர்க்க புதுச்சேரி மற்றும் தமிழக அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் விடுமுறை நாட்களை, முன்பதிவு செய்திருக்கும் நோயாளிகளின் மொபைல் எண்களிலும் ஜிப்மர் தகவல் தெரிவிக்கவேண்டும். அப்போதுதான் பல கிமீ தொலைவு பயணித்து வருவதை தவிர்க்க இயலும்.” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *