முதலமைச்சரின் தொடர் முன்னெடுப்புகளால் பல்வேறு உலக நாடுகளில் அவர் பயணம் செய்து, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு, அதன் வாயிலாக முதலீட்டாளர்களின் சந்திப்பின் மூலமாக, 11 இலட்சத்து 40 ஆயிரத்து 731 கோடி முதலீடுகள் பெறப்பட்டு, 1016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ 34 இலட்சத்து 8 ஆயிரத்து 522 இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் நாம் வேலை வாய்ப்புகளை கொண்டு வந்திருக்கிறோம்.
ஏற்றுமதியை பொறுத்தவரையில், நாம் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை பெறுவதற்கு அடிப்படையாக அமைந்திருக்கின்ற தமிழ்நாட்டின் ஏற்றுமதியின் சாதனை ஒன்றிய அரசின் தரவுகளின்படி 2021-22-ஆம் நிதியாண்டில், 1.86 பில்லியன் டாலராக இருந்தது. 2022-23-ஆம் நிதியாண்டில் 5.37 பில்லியன் டாலராகவும், 2023-24-ஆம் நிதியாண்டில் 9.56 பில்லியன் டாலராகவும், 2024-25-ஆம் நிதியாண்டில் 14.65 பில்லியன் டாலராக மின்னணு பொருள்களின் ஏற்றுமதி மூன்று ஆண்டுகளில், ஏறத்தாழ ஏழு மடங்கு அதிகரித்திருக்கிறது. ஏறத்தாழ 700 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது என்பதை நம்முடைய அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த மின்னணு பொருள்களின் ஏற்றுமதியில் நம்முடைய தமிழ்நாடு மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்றிருக்கிறது.

Welfare measures என்ற வகையில், தமிழ்நாடு வளர்ச்சி விகித குறியீடுகளில் அவர் கொண்டு வந்திருக்கக்கூடிய பல்வேறு திட்டங்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணத் திட்டம், காக்கும் கரங்கள் திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம் என்று பல்வேறு திட்டங்களின் மூலமாக தமிழ்நாட்டின் நலத் திட்டங்களிலும் தமிழ்நாடு அரசு ஒரு மாபெரும் கவனத்தைச் செலுத்தியிருக்கிறது.
அதேபோல, GR (Gross Environment Ratio) இன்றைக்கு உயர் கல்வியில் 47 சதவிகிதம் அகில இந்திய சராசரி 28.4 சதவிகிதமாக இருக்கும்போது தமிழ்நாடு இன்றைக்கு 47 சதவிகிதம் வந்திருக்கிறது. அதேபோல உயர்கல்வி அதிகமாக பெற்றிருக்கக்கூடிய மாநிலமாக நாம் இன்றைக்கு வந்திருக்கிறோம்.
நான் சட்டமன்றத்தில் கூட சொன்னேன், நிதிப் பற்றாக்குறையை (fiscal deficit) நாம் எப்போதும் நிதி மேலாண்மைக்கு உட்பட்டுதான் கையாண்டிருக்கிறோம் என்பதையும், அது மாநில ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும், நம்முடைய நிதிப் பற்றாக்குறை என்பது 3 சதவிகிதத்திற்குள்ளாகவே வரக்கூடிய 2025-26-ஆம் நிதியாண்டில் அது கட்டுப்படுத்தப்படும் என்பதை நான் தெரிவித்திருக்கிறேன்.
அதேபோல, கடனுக்கும் (debt), மாநிலத்தின் உற்பத்தி மதிப்பீட்டிலான அந்த ratio-வில், அது கடந்த 2021-22-ஆம் ஆண்டில் 27 சதவிகிதமாக இருந்தது; 2024-25-ஆம் ஆண்டில் ஏறத்தாழ 26 சதவிகிதமாக குறைவாக வந்திருக்கிறது என்பதையும் நான் இங்கே எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால், தமிழ்நாட்டின், நீடித்த, நிலையான வளர்ச்சி என்பது low inflation ஆக இருந்தாலும் சரி, அல்லது வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வருவதாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு கட்டத்திலும் நான் எடுத்துக் காட்டியிருக்கக்கூடிய தொழில் முதலீடுகளை ஊக்குவிப்பதாக இருந்தாலும் சரி இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக நம்முடைய 1 டிரில்லியன் பொருளாதாரத்தை நாம் அடைவதற்கு முதலமைச்சர் அவர்களுடைய முன்னெடுப்பால், அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டிருக்கக்கூடிய பல்வேறு பணிகளால் இது சாத்தியமாகி இருக்கிறது. இன்றைக்கு ஒட்டுமொத்த குறியீடாக 16 சதவிகித வளர்ச்சியை நம்முடைய ரிசர்வ் பேங்க ஃஆப் இந்தியா வழங்கி இருப்பதும், நம்முடைய தமிழ்நாட்டின் நிதி மேலாண்மைக்கு ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு, தொழில் வளர்ச்சிக்கு, நம்முடைய சமூக வளர்ச்சிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலையிலான திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்திருக்கக்கூடிய ஒரு மாபெரும் நற்சான்று இந்த 16 சதவிகிதம் வளர்ச்சி என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.