10 நாட்களில் தேர்தல்.. இணையத்தில் வெளியான ‘ஜனநாயகன்’ படம்: சிபிஐ விசாரணை கோரிய அன்புமணி |Elections in 10 Days… ‘Jananayagan’ Film Released Online: Sparks Controversy as Calls for CBI Probe Mount!

Spread the love

தற்போது தேர்தல் நடைபெற இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், 7 ஜிபி (HD) அளவிலான உயர்தரத்தில் இப்படம் முழுமையாக இணையத்தில் கசிந்திருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. இந்தத் தருணத்தில் படம் வெளியாவது யாருக்குச் சாதகமானது? இதன் பின்னணியில் உள்ள அரசியல் சக்திகள் யார்? என்பதை நாம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.

இப்படம் ஆளுங்கட்சிக்கும், எங்களது கூட்டணிக்கும் எதிராகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரத்தில் உண்மைத் தன்மையைக் கண்டறிய சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். ஒரு திரைப்படத்தின் உயர்தரக் கோப்புகளில் பொதுவாக தயாரிப்பாளர், இயக்குநர் அல்லது படத்தொகுப்பாளர் ஆகியோருக்கெனத் தனித்துவமான ‘வாட்டர்மார்க்’ அடையாளங்கள் இருக்கும்.

அத்தகைய அடையாளங்கள் உள்ள கோப்புகளை அந்தப் படக்குழுவின் உள்வட்டத்தில் இருப்பவர்களால் மட்டுமே வைத்திருக்கவோ அல்லது வெளியிடவோ முடியும்.

தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், சிபிஐ விசாரணை அறிவிக்கப்பட்டு அதன் முடிவுகள் வருவதற்குள் தேர்தல் முடிந்துவிடக்கூடும். இருப்பினும், இவ்வளவு துல்லியமான தரத்தில் படம் கசிந்திருப்பதைக் கவனிக்கும்போது, இது ஒரு திட்டமிட்ட அரசியல் நகர்வு என்பது தெளிவாகிறது. இதன் பின்னணியில் உள்ள உள்நோக்கத்தை மக்கள் தீர்மானத்திற்கே விட்டுவிடுகிறேன்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *