10 மாத குழந்தையின் நுரையீரல் பாதைக்குள் சிக்கிய மூக்குத்தி: லாவகமாக அகற்றிய மருத்துவர்கள் | Doctors who removed it successfully nose ring stuck in 10 month old baby lungs

1379401
Spread the love

சென்னை: சென்னை எழும்​பூர் அரசு குழந்​தைகள் நல மருத்​து​வ​மனை​யில் 10 மாதக் குழந்​தை​யின் நுரை​யீரல் பாதைக்​குள் சிக்​கிய மூக்​குத்​தியை 2 சிகிச்​சைகள் மூலம் மருத்​து​வர்​கள் வெளியே எடுத்​தனர்.

இது தொடர்​பாக சென்னை எழும்​பூர் அரசு குழந்​தைகள் நல மருத்​து​வ​மனை​யின் இயக்​குநர் மருத்​து​வர் லட்​சுமி கூறிய​தாவது: காஞ்​சிபுரத்​தைச் சேர்ந்த 10 மாதக் குழந்​தை​யானது தனது தாயின் மூக்​குத்​தியை கடித்து விளை​யாடிக் கொண்​டிருந்​தது. அப்​போது தவறு​தலாக அந்த மூக்​குத்தி சுவாசப் பாதைக்​குள் சென்​று​விட்​டது. குழந்​தை​யின் இடது பக்க நுரை​யீரல் சுவாசப் பாதை​யின் அடிப்​பகு​தி​யில் மூக்​குத்தி சிக்​கிக் கொண்​டுள்​ளது.

சென்னை எழும்​பூர் அரசு குழந்​தைகள் நல மருத்​து​வ​மனைக்கு கடந்த 6-ம் தேதி குழந்தை அழைத்து வரப்​பட்​டது. மருத்​து​வ​மனை​யின் நுரை​யீரல் சிறப்பு மருத்​து​வர் சரத் பாலாஜி, காது – மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்​து​வர் மேஜர் ஜெ.நிர்​மல்​கு​மார், மயக்​க​வியல் மருத்​து​வர் தனலட்​சுமி ஆகியோர் கொண்ட குழு​வினர் குழந்​தைக்கு சிகிச்​சையளித்​தனர்.

வளை​யும் தன்​மை​யுடன் கூடிய குழாயை குழந்​தை​யின் சுவாசப் பாதை​யில் நுரை​யீரல் மருத்​து​வர்​கள் செலுத்​தினர். நுரை​யீரலின் கீழ் சுவாசப் பாதை​யில் இருந்த அந்த மூக்​குத்​தி​யை, அங்​கிருந்து மேல் பகு​திக்கு நகர்த்​திக் கொண்டு வந்​து, ரிஜிட் ப்ராங்​கோஸ்​கோப்பி எனப்​படும் ஊடு​குழாயை செலுத்தி மூக்​குத்​தியை வெளியே எடுத்​தனர். இந்த சிகிச்​சை​யின்​போது குழந்​தைக்கு தொடர்ந்து மயக்க மருந்து சிகிச்சை வழங்​கப்​பட்​டது. உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் இருந்த குழந்​தை, இந்த இரு​வேறு ப்ராங்​கோஸ்​கோபி சிகிச்​சைகள் மூலம் நலமுடன் உள்​ளது. இவ்​​வாறு அவர்​ தெரி​வித்​​தார்​​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *