10 லட்சம் பார்வைகளைக் கடந்த பேட் கேர்ள் டீசரும்! விமர்சனங்களும்!

Dinamani2f2025 01 302fx72i9n1v2fimage 4.png
Spread the love

விமர்சன ரீதியாக வைரலான பேட் கேர்ள் திரைப்படத்தின் டீசர் 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்தது.

இயக்குநர்கள் அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் வழங்கும் பேட் கேர்ள் திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டீசர் குடியரசு நாளில் வெளியிடப்பட்டது. ரோட்டர்ராமில் நடைபெறவுள்ள 54-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள பேட் கேர்ள் டீசர், யூடியூப் தளத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது.

இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரமாக அஞ்சலி சிவராமன் உள்பட சாந்தி பிரியா, ஹிரிது ஹருண், டிஜே அருணாசலம், சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஒரு பெண்ணின் பள்ளி காதல் வாழ்க்கை, முதல் முத்தம், காதல், ஆசைகள், எதிர்பார்ப்புகளை வைத்து படம் நகர்வதாகத் தெரிகிறது.

இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் சமூக ஊடகங்களை ஆட்கொண்டுள்ளன. இருப்பினும், பேட் கேர்ள் படம் பெண்ணியம் பற்றி பேசவில்லை; ஒழுங்கற்ற நடவடிக்கைகள் குறித்து பேசுவதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் படத்துக்கு வரவேற்பு அளிப்பதாக இயக்குநர் பா. ரஞ்சித் கூறியதை, இயக்குநர் மோகன் ஜி விமர்சித்துள்ளார். அதுமட்டுமின்றி, முதன்மை கதாபாத்திரம் பிராமண வீட்டுப் பெண்ணாக சித்திரிக்கப்பட்டதாகக் கூறி, பாஜகவினர் சிலரும் பேட் கேர்ள் படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: தமிழ் தீ பரவட்டும்… பராசக்தி புதிய போஸ்டர்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *