10-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – பெ.சண்முகம், சீமான் நேரில் ஆதரவு | Sanitation workers strike continues for 10th day

1372653
Spread the love

சென்னை: பேச்சு​வார்த்​தை​யில் தீர்வு கிடைக்​காத நிலை​யில் 10-வது நாளாக நேற்​றும் ரிப்​பன் மாளிகை முன்பு தூய்​மைப் பணியாளர்​கள் போராட்டத்தில் ஈடு​பட்​டனர்.

சென்னை மாநக​ராட்​சி​யில் ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு விட்​டதை கண்​டித்​தும், பணி நிரந்​தரம் கோரி​யும், ஏற்​கெனவே என்​யூஎல்​எம் திட்​டம் மூலம் வழங்கப்பட்ட தூய்​மைப் பணியை தொடர வலி​யுறுத்​தி​யும் தூய்​மைப் பணியாளர்​கள் ரிப்​பன் மாளிகை முன்​பு, இரவு, பகலாக அங்​கேயே தங்​கி, நேற்​றும் 10வது நாளாக போராட்​டத்தை தொடர்ந்​தனர்.

இது​வரை 6 கட்ட பேச்​சு​வார்த்​தைகள் முடிந்​து, தீர்வு எட்​டப்​பட​வில்​லை. இந்​நிலை​யில், அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு தலை​மை​யில், மேயர் ஆர்​.பிரியா, ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்​னிலை​யில் 7-ம் கட்ட பேச்​சு​வார்த்தை ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் உழைப்​போர் உரிமை இயக்க பிர​தி​நி​தி​கள் மற்​றும் தூய்​மைப் பணி​யாளர்​கள் ஈடு​பட்​டனர்.

பின்​னர் உழைப்​போர் உரிமை இயக்க செய​லா​ளர் சுரேஷ் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “இந்த பேச்​சு​வார்த்​தை​யில் எங்களது கோரிக்​கையை பற்றி ஒரு வார்த்தை கூட பேச​வில்​லை. எங்​களை அப்​புறப்​படுத்​து​வதை பற்றி மட்​டுமே பேசினர். போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​வோரிடம், திமுக கவுன்​சிலர்​கள் பணத்​தாசை காட்​டி, இந்த போராட்​டத்தை கலைக்க பார்க்கின்றனர்” என்​றார்.

17548771552006

உழைப்​போர் உரிமை இயக்க தலை​வர் பாரதி பேசும்​போது, “எங்​களது கோரிக்​கையை ஏற்​கும் வரை போராட்​டம் தொடரும். போராட்​டக்​காரர்​கள் பணிக்கு திரும்​பிய​தாக வரும் தகவல் அனைத்​தும் பொய்” என்​றார். இதனிடையே, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி மாநில செய​லா​ளர் சண்​முகம், போராட்​டக்​காரர்​களை சந்​தித்து ஆதரவு தெரி​வித்​தார்.

பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “நாடு முழு​வதும் தனி​யார்​ மய​மாகி வரு​கிறது. தமிழகத்​தி​லும் பல்​வேறு துறைகள் தனி​யார்​ மய​மாகிறது. இருப்​பினும், ஏற்​கெனவே பெற்று வரும் உரிமை​களை பறிப்​பதை ஏற்க முடி​யாது. நியாய​மான முறை​யில் தூய்மை பணியாளர் போராட்டத்துக்கு தீர்​வு​காண நாங்​கள் முயற்சி மேற்​கொள்​வோம்’’ என்றார். அதைத் தொடர்ந்​து, நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான்​, போ​ராட்​டக்​காரர்​களை சந்​தித்​து முழு ஆதர​வை தெரி​வித்​தார்​.

17548771262006

பின்னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: நகரத்தை சுத்​தம் செய்​யும் பணியை தனி​யாருக்கு கொடுக்க வேண்​டிய அவசியம் என்ன? பின் எதற்​காக மாநக​ராட்சி இருக்​கிறது? தூய்மை பணி​யாளர்​களை பணி நிரந்​தரம் செய்ய நிதி இல்லை என்கின்​றனர்.

ஆனால் மதுரை​யில் ரூ.200 கோடி​யில் மறைந்த முதல்​வர் கருணாநிதி பெயரில் நூல​கம் கட்​டி​யிருக்​கின்​றனர். இது​போன்ற தேவையில்​லாத செல​வு​கள் செய்து பொய்​யான வாக்​குறு​தி​களை கொடுத்​து​விட்டு மக்​களை ஏமாற்​று​வது எந்​தவகை​யில் நியாயம்? இதனால் இன்​றைக்கு குப்பை அள்​ளும் மக்​கள் போராட்ட களத்​துக்கு வந்​து​விட்​டனர். எனவே 2021-ல் கொடுத்த வாக்​குறுதி​களை முதல்​வர் நிறைவேற்ற வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

அதனைத் தொடர்ந்து பாமக பொருளாளர் தில​க​பாமா போராட்​டக்​காரர்​களை நேரில் சந்​தித்து ஆதரவு தெரி​வித்​தார். ‘தூய்​மைப் பணி​யாளர்​களின் கோரிக்​கையை சமூகநீ​திக் கண்​ணோட்​டத்​தில் அரசு பரிசீலிக்க வேண்​டும்’ என்று திரா​விடர் கழகத் தலை​வர் கி.வீரமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார். ‘பேச்​சு​வார்த்தை எனும் பெயரில் மிரட்டி தூய்​மைப் பணி​யாளர்​களின் அறப்​போ​ராட்​டத்தை கலைக்க முற்​படு​வது கடும் கண்​டனத்​துக்​குரியது’ என்று அமமுக பொதுச் ​செய​லா​ளர் டிடிவி தினகரன்​ தெரிவித்​துள்​ளார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *