'10 வருடங்கள் கழித்து திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்?' – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

Spread the love

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக, சட்டசபை தேர்தலுக்கானக் கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்தது.

தேமுதிக, திமுகவில் இணையுமா? அதிமுகவில் இணையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில் இன்று ( பிப்.19) தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக கூட்டணியில் இணைத்திருக்கிறார்.

திமுகவில் இணைந்த தேமுதிக
திமுகவில் இணைந்த தேமுதிக

தேமுதிக முதல் முறையாக திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது. திமுகவில் இணைந்தப் பிறகு தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

செய்தியாளர்கள் சந்தித்து பேசிய அவர், ” திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை உறுதி செய்கிறோம். எங்களுடைய கழகச் செயலாளர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லோரும் திமுகவுடன் கூட்டணி வைப்பதைத் தான் விரும்பினார்கள்.

கேப்டன் இல்லாத நேரத்தில் இந்தக் கூட்டணி அமைத்திருக்கிறது. 2016-ல் இந்தக் கூட்டணி அமைய வேண்டியது. கலைஞர் ஐயா பழம் நழுவி பாலில் விழப்போகிறது என்று சொன்னார்.

திமுகவில் இணைந்த தேமுதிக
திமுகவில் இணைந்த தேமுதிக

ஆனால் 10 வருடங்கள் கழித்து தாமதமாக இந்தக் கூட்டணி உறுதியாகி இருக்கிறது என்பதை மகிழ்ச்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன். எத்தனை நம்பர், யார் வேட்பாளர்கள், எந்தத் தொகுதி என்பது எல்லாம் குழு அமைத்து இரண்டு கட்சிகளும் பேசி முடிவு எடுக்கும். அதனை அண்ணன் ஸ்டாலின் அறிவிப்பார்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *