100-ஆவது ஐபிஎல் போட்டியில் ராகுல் தெவாதியா!

Dinamani2f2025 04 192fxc8z84oa2fgobqkliw0aahdfi.jpeg
Spread the love

குஜராத் டைட்டன்ஸ் வீரர் ராகுல் தெவாதியா இன்று தனது 100ஆவது ஐபிஎல் போட்டியில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக விளையாடுகிறார்.

ஹரியாணாவைச் சேர்ந்த ராகுல் தெவாதியா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2014ஆம் ஆண்டு அறிமுகமானார்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 2022 முதல் விளையாடி வருகிறார்.

ஆல்-ரவுண்டரான ராகுல் தெவாதியா 99 ஐபிஎல் போட்டிகளில் 1,043 ரன்கள், 32 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள், கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் என அடித்து போட்டியை வென்று கொடுத்துள்ளார்.

சிறந்த பினிஷராக அறியப்பட்டு வரும் ராகுல் தெவாதியா சமீபகாலங்களில் சுமாராகவே விளையாடி வருகிறார்.

குஜராத் டைட்டன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்தில் இருக்கிறது.

இதற்காக ஐபிஎல் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *