100-ஆவது ஐபிஎல் போட்டியில் ஷர்துல் தாக்குர்!

Dinamani2f2025 04 082fk2cyww1q2fshard.jpg
Spread the love

வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர் ஐபிஎல் தொடரில் தனது 100-ஆவது போட்டியில் களமிறங்கியுள்ளார்.

இந்த சீசனில் ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகாமல் இருந்து பின்னர் காயம் காரணமாக விலகியவருக்குப் பதிலாக மாற்று வீரராக லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் சேர்ந்தார்.

லக்னௌ அணியில் சிறப்பாக விளையாடி வரும் ஷர்துல் தாக்குர் தனது 100-ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக சிறப்பு சீருடையைப் பெற்றார்.

இதற்கு முன்பாக சிஎஸ்கே அணியில் விளையாடிய ஷர்துல் தாக்குர் இந்தியாவுக்கு டெஸ்ட் அணியில் முக்கியமான வீரராக இருக்கிறார்.

100 ஐபிஎல் போட்டிகளில் 101 விக்கெட்டுகள் 315 ரன்கள் எடுத்துள்ளார். 138.15 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடும் ஷர்துல் தாக்குர் ஐபிஎல் தொடரில் ஒரு அரைசதம் அடித்துள்ளார்.

லக்னௌ, கேகேஆர் போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *