100 நாளும் கடன் வாங்கித் தான் சமாளிச்சாங்க.இப்பவும் கடனுக்காத்தான் ஓடுறேன்” – பிக்பாஸ் சுபிக்‌ஷா!

Spread the love

போட்டிக்காக இப்படியெல்லாம் பண்ணுவாங்களானு தோணுச்சு. அங்க இருக்கும் போது நம்மைச் சுத்தி என்ன நடக்குது, யார் என்ன சொன்னாங்க இப்படி எதுவுமே தெரியாது. நிகழ்ச்சி முடிஞ்சு வெளிய வந்த பிறகு ஆரோரா, திவ்யா, விக்ரம் அண்ணா, வினோத் அண்ணானு சிலர் கூட நட்பு தொடருது…

” என்றவரிடம் பிக்பாஸ்க்கு முன், பிக்பாஸ்க்குப் பின் உங்க வாழ்க்கையில நடந்த மாற்றங்கள்  பற்றிச்  சொல்லுங்க என்ற கேள்வியை முன் வைத்தோம்.

சுபிக்‌ஷா

சுபிக்‌ஷா

“போற இடத்துல எல்லாம் மக்களோட அன்பு கிடைக்குது. எங்க அப்பா ரொம்ப பெருமையா ஃ பீல் பன்றாங்க. எனக்காக அப்பா கொடுத்த சப்போர்ட்க்கு நான் நியாயம் சேர்த்துருக்கேன்னு நினைக்கிறேன். சில இடங்கள்ல விமர்சனங்களும் இருக்கு. ‘ நீ மீனவப் பொண்ணுதான. பிக்பாஸ் போயிட்டு வந்து சீன் போடுற’, ‘ஆளே மாறிட்ட’னு எல்லாம் கமென்ட் பண்றாங்க. பொதுவா மீனவப் பெண்கள்னா சேலைகட்டி, கொண்டை போட்டுட்டு இருப்பாங்க. ஆனா, நான் வித்தியாசமா பேன்ட் – ஷர்ட் போட்டுதான் விலாக் பண்ண ஆரம்பிச்சேன். ஆனா, வாழ்க்கை முழுக்க நான் அப்படியே இருக்கணும்னு அவசியம் இல்லயே. கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறேன். எனக்கு பிடிச்ச மாதிரியான ட்ரெஸ்களை வாங்கிப் போடுறேன். சேலை கட்டுனா கூட கமென்ட் பண்றவங்களை என்ன பண்றது? என்னோட வாழ்க்கையை எனக்கு பிடிச்ச மாதிரி வாழ உரிமை இருக்குதானே” என்றவரிடம் நிகழ்ச்சியில் உங்களுக்கு லட்சங்களில் சம்பளம் என்று சொல்லப்பட்டதே? என்ற கேள்வியை முன்வைத்தோம்.

– சிரித்துக்கொண்டே தொடர்கிறார்.

“நிகழ்ச்சிக்காக நான் உள்ள இருந்த நாள்களில் என் குடும்பம் வாங்குன கடனை அடைக்கத் தான் இப்போ வரைக்கும் ஷூட், புரோமோஷன்னு ஓடிக்கிட்டு இருக்கேன். இப்போ ஒரு படத்துல கமிட் ஆயிருக்கேன். கூடிய சீக்கிரம் வெள்ளித் திரையில சுபியை பார்க்கலாம்” என்று விடை பெறுகிறார் சுபிக்ஷா.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *