100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கம் – ஸ்டாலின், பிரியங்கா காந்தி எதிரிப்பு|MGNREGA Shakeup Sparks Nationwide Backlash From Leaders

Spread the love

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மாற்றத்திற்கு எதிராக தற்போது இந்தியா முழுவதும் சர்ச்சைகள் வெடித்து வருகின்றன.

பயிர்காலம் அல்லாத நேரங்களில் இந்திய கிராமப்புறங்களுக்கு பேருதவியாக இருந்து வருவது இந்த “100 நாள் வேலை திட்டம்’.

இந்தத் திட்டம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், 2008-ம் ஆண்டு இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டது. இது இப்போது வரை காங்கிரஸ் ஆட்சியின் டாப் திட்டம் ஆகும்.

இந்தத் திட்டத்தை மாற்றி புதிய மசோதா ஒன்றை கொண்டு வர உள்ளது மத்திய அரசு. அதன் படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்பதை மாற்றி, ‘வளர்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்புச் சட்டம்’ என்று பெயரிடப்பட உள்ளது.

இதற்கு இப்போது இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்:

“மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு!

> தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *