டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 378 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி நியூசிலாந்தைக் காட்டிலும் 533 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.