உங்கள் முதலீட்டுப் பணத்துக்கு ஆண்டுதோறும் எத்தனை சதவிகிதம் லாபம் கிடைக்கிறது என்பதுதான் சொல்வதுதான் CAGR என சுருக்கமாக சொல்லப்படும் Compounding Annual Growth Rate. நம் முதலீட்டுக்கு எத்தனை சதவிகிதம் லாபம் கிடைத்தால், எத்தனை ஆண்டுகளில் அது டபுளாகும் என்பதை இனி பார்ப்போம்.
ஆண்டுதோறும் 2% லாபம் கிடைத்தால் – 36 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்
ஆண்டுதோறும் 3% லாபம் கிடைத்தால் – 24 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்
ஆண்டுதோறும் 4% லாபம் கிடைத்தால் – 18 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்
ஆண்டுதோறும் 5% லாபம் கிடைத்தால் – 14.4 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்
ஆண்டுதோறும் 6% லாபம் கிடைத்தால் – 12 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்
ஆண்டுதோறும் 7% லாபம் கிடைத்தால் – 10.3 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்
ஆண்டுதோறும் 8% லாபம் கிடைத்தால் – 9 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்
ஆண்டுதோறும் 9% லாபம் கிடைத்தால் – 8 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்
ஆண்டுதோறும் 10% லாபம் கிடைத்தால் – 7.2 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்
ஆண்டுதோறும் 11% லாபம் கிடைத்தால் – 6.5 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்
ஆண்டுதோறும் 13% லாபம் கிடைத்தால் – 5.7 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்
ஆண்டுதோறும் 14% லாபம் கிடைத்தால் – 5.3 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்
ஆண்டுதோறும் 15% லாபம் கிடைத்தால் – 5 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்
ஆண்டுதோறும் 20% லாபம் கிடைத்தால் – 3.8 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்
இதுதான் நம் பணம் டபுள் ஆவதற்கு எடுத்துக் கொள்ளப்படும் கால அளவாகும். அதிகமான விகிதத்தில் நமக்கு லாபம் கிடைத்தால், குறைந்த காலத்தில் நம் பணம் டபுள் ஆகும். குறைந்த விகிதத்தில் வருமானம் கிடைத்தால், நம் பணம் டபுள் ஆவதற்கு அதிக காலம் பிடிக்கும்! இந்த உண்மையைப் புரிந்துகொண்டால், நாம் எந்த அளவு ரிஸ்க் எடுக்கலாம் என்பதை எளிதாக முடிவு செய்ய முடியும்!
ஆண்டுதோறும் 20% லாபம் தொடர்ச்சியாகக் கிடைப்பதே அரிது என்கிறபோது 11 நாளில் நம் பணம் இரண்டு மடங்காகப் பெருக வேண்டும் என்றால் அது எத்தனை ஆயிரம் சதவிகிதத்தில் வளர வேண்டும் என்பதை நீங்கள் கணக்கு போட்டுப் பாருங்கள்! ஒரே மாதத்தில் பணம் டபுளாகும், ஒரே ஆண்டில் பணம் டபுளாகும் என்று இனி யாராவது உங்களிடம் சொன்னால், `உடு ஜூட்’ என்று காணாமல் போய்விடுங்கள்!