தமிழ்நாட்டில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வை எழுதி உள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் ஏப்ரல் 2 ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடந்து முடிந்தது.
நாளை தேர்வு முடிவு
இந்த நிலையில் தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை(6-ந்தேதி) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.
செல்போனில்
மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வமான http://tnresults.nic.in or http://dge.tn.gov.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம்.
மேலும் அன்றே மாணவ-மாணவிகளின் செல்போனிற்கு அவர்களது மதிப்பெண் பட்டியல் அனுப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.