12 மணி நேரத்தில் 1000 பேர்…‘ஒன்லிஃபேன்ஸ்’ பிரபலம் பாலியில் கைது – என்ன காரணம்? | OnlyFans Star Bonnie Blue Arrested in Bali Over Pornography Case: Faces Up to 15 Years Jail

Spread the love

இந்தோனேசியாவின் பாலி தீவில் ஆபாசக் காணொளிகளை தயாரித்து விநியோகித்த குற்றச்சாட்டில், இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல “ஒன்லிஃபேன்ஸ்’ நட்சத்திரம் பாணி ப்ளூ கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் பாலியில் இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது. அவருடன் இருந்த 17 ஆண் சுற்றுலாப் பயணிகளும் இதில் பிடிபட்டுள்ளனர். இவர்களில் 15 பேர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.​

பாலியில் நடந்தது என்ன?

பாலி தீவில் “பேங்பஸ்” என்ற பெயரில் ஒரு சுற்றுலாத் திட்டத்தை பாணி ப்ளூ விளம்பரப்படுத்தியதே தற்போதைய கைதுக்கு காரணம். பள்ளிப் படிப்பை முடித்து சுற்றுலா வரும் ஆஸ்திரேலிய இளைஞர்களைக் குறிவைத்து, பேருந்து ஒன்றில் ஆபாசக் காட்சிகளை படமாக்க அவர் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.​

ஆபாச படங்கள்

ஆபாச படங்கள்
மாதிரிப் படம்

சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட பதிவில், “பள்ளிப் படிப்பை முடித்து வரும் இளைஞர்களைச் சந்திக்க ஆவலாக உள்ளேன், நான் பாலியில் இருக்கிறேன், அதற்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்கே தெரியும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

உள்ளூர் புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், “பாணி ப்ளூவின் பேங்பஸ்” எனப் பெயரிடப்பட்ட வாகனம், கேமராக்கள் மற்றும் இதர உபகரணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

தற்போது பாணி ப்ளூவின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் ஆபாச எதிர்ப்புச் சட்டங்களின்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாணி ப்ளூவிற்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், சுமார் 6 பில்லியன் ருபியா (தோராயமாக $541,000) அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யார் இந்த பாணி ப்ளூ?

26 வயதான பிரிட்டிஷ் பெண்ணான பாணி ப்ளூவின் உண்மையான பெயர் டியா பில்லிங்கர். இவர் ஏற்கனவே இணையத்தில் பெரும் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 12 மணி நேரத்தில் 1,057 ஆண்களுடன் உறவு கொண்டதாக அவர் வெளியிட்ட தகவல் பெரிய அளவில் பேசப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *