124 வயது.. நாட் அவுட்! எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டும் அதிசய பெண் யார்?

dinamani2F2025 08 122F48us6tbk2FPTI08122025000063A
Spread the love

பாட்னா: வாக்குத் திருட்டு என்ற குற்றச்சாட்டில், வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில், ஊடகங்களில் நேற்று தலைப்புச் செய்தியானவர் மிண்டா தேவி.

பிகார் மாநிலம் தரௌந்தா பகுதியைச் சேர்ந்தவர்தான் மிண்டா தேவி. இவரது வாக்காளர் அடையாள அட்டையில் பிறந்த ஆண்டு 1900 என்று உள்ளது. இதன்படி, அவரது வயது 124. ஆனால், உலகிலேயே அதிக வயதுடைய நபராக 115 வயதுடைய ஒருவரது பெயர் இடம்பெற்றுள்ளது. எனவே, உலகில் 124 வயதில் மிண்டா தேவி பிகார் மாநிலத்தில் வசித்து வருகிறாரே என்ற கேள்வியும் எழுகிறது.

4b1172db a172 4fba ac62 b159630f294e
மிண்டா தேவி

அது மட்டுமல்ல.. 124 வயதில் ஒருவர் உயிரோடு இருக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது. சரி உண்மை என்ன என்று மிண்டா தேவியின் வாக்காளர் பட்டியல் முகவரியைத் தேடிக்கொண்டு ஊடகத்தினர் செல்லத் தொடங்கினர்.

அப்போதுதான் உண்மை வெளியே வந்தது. உண்மையில் மிண்டா தேவிக்கு 124 வயதாகவில்லை. அவரது வயது வெறும் 35. கிட்டத்தட்ட 89 வயது அதிகமாக வாக்காளர் பட்டியலில் பதிவாகியிருக்கிறது. இதற்குக் காரணம் அவரது பிறந்த ஆண்டு 1990. அதற்கு பதிலாக பிழையாக 1900 என்ற பதிவிடப்பட்டதே இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் காரணமாக உள்ளது.

இது பற்றி அவர் பல்வேறு ஊடகங்களுக்கும் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், எனது வாக்காளர் அடையாள அட்டை முழுக்க நிறைய தவறுகள் உள்ளன. எனது வீட்டு முகவரியில்தான், எனது கணவரின் பெயர் இடம்பெற்றுள்ளது என்கிறார்.

அது மட்டுமல்ல, இது தேர்தல் ஆணையத்தின் தவறு. ஆன்லைன் மூலம்தான் விண்ணப்பித்தேன். ஆனால் நான் இப்போது எங்குச் சென்றாலும் என் வயதை கேட்கிறார்கள். செய்திகளில் என் பெயர் வெளியாகும் வரை, எனது வாக்காளர் அடையாள அட்டையில் இப்படி ஒரு தவறு இருப்பதையே நான் பார்க்கவில்லை என்றும் கூறுகிறார்.

இவர் மட்டுமே இப்படி 124 வயதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நினைக்க வேண்டாம். பிகாரில் இவரைப் போல 120 வயதிலும், 119 வயதிலும் சிலர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்கிறது அதிகாரப்பூர்வ தரவுகள். ஆனால், அலுவலர்கள் இவர்களது இல்லங்களுக்குச் சென்று இவர்களது வயதை உறுதி செய்திருப்பதாகவும், இதுதான் அவர்களது உண்மையான வயது என்றும் தெரிவிக்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *