இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சுனில் நரைன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்ஷித் ராணா தலா இரண்டு விக்கெட்டுகளையும், மொயின் அலி மற்றும் வைபவ் அரோரா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் எந்தவித தயக்கமுமின்றி ஆட்டத்தை விரைவாக முடிக்க முனைப்பு காட்டினர்.
குயிண்டன் டிகாக் – சுனில் நரைன் இருவரும் இணைந்து சென்னை பந்து வீச்சை சிதறடித்தனர். சுனில் நரைன் 44 ரன்களும்(2பவுண்டரி, 5 சிக்ஸர்), டிகாக் 23 ரன்களும்(3 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தனர். அவரகளுக்குப் பின்னர் வந்த ரஹானே – ரிங்கு சிங் இருவரும் இணைந்து கொல்கத்தா அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
முடிவில், 10.1 ஓவர்களில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. சென்னை தரப்பில் கம்போஜ், நூர் அகமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணி 13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி சென்னை அணி தொடர்ச்சியாக 5 வது தோல்வியும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ச்சியாக 3-வது தோல்வியாக அமைந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 5 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 3 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிக்க: ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி வரலாற்று சாதனை!