பெண்கள் சில நேரங்களில் பணி செய்யும் இடங்களில் திருமணமான ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்வார்கள். சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு திருமணமாகிவிட்டது என்று தெரிந்தே அவர்கள் அவர்களுடன் உறவில் இருப்பார்கள். அந்த ஆண்கள் “உன்னை திருமணம் செய்துகொள்கிறேன்” என்று சொல்வதையும் பெண்கள் நம்புவார்கள். திருமணம் என்று வரும் போது, ஆண்கள் எதாவது காரணத்தை சொல்லி தட்டிக்கழிக்கும்போதுதான் பெண்கள் தவறை உணருவார்கள்.
அது போன்ற ஒரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மும்பை மாட்டுங்கா பகுதியைச் சேர்ந்த 30 பெண்ணிற்கு அலுவலகத்தில் பணியாற்றியபோது, அதே அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றிய நபருடன் தொடர்பு ஏற்பட்டது. இது காதலாக மாறி, பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் அளவுக்கு சென்றது.

2000 முதல் 2013ம் ஆண்டு வரை அவர்களது உறவு நீடித்தது. 2014ம் ஆண்டு, அப்பெண் தன்னை தனது ஆண் நண்பர் திருமணம் செய்வதாக கூறி உறவு வைத்து ஏமாற்றிவிட்டார் என்று கூறி மாட்டுங்கா போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
3 முறை கருக்கலைப்பு
இவ்வழக்கு மும்பை செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இவ்விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கூறினார், “சம்பந்தப்பட்ட கம்பெனியில் மனுதாரர் நிர்வாக பிரிவிலும், குற்றம் சாட்டப்பட்டவர் மேலாளராகவும் இருந்தனர். 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மனுதாரரை குற்றம் சாட்டப்பட்டவர் தனது வீட்டிற்கு வரவைத்தார். அங்கு மனுதாரரின் விருப்பத்திற்கு மாறாக, அவர் அவருடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டார்.
ஆனால் அதன் பிறகு மனுதாரரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, தொடர்ந்து பாலியல் உறவு வைத்துக்கொண்டார். இதனால் மனுதாரர் 2001, 2010, 2012ம் ஆண்டுகளில் கர்ப்பமானார். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் சொன்னதால், மூன்று முறையும் கருவை கலைத்தார்.”