உலக அளவில் இந்த மைல்கல்லை எட்டிய 7-ஆவது வீரராகவும் இங்கிலாந்தின் வரிசையில் 2-ஆவது வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.
மொத்தமாக பட்லர் 457 டி20 போட்டிகளில் விளையாடி 13, 046 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 45.74ஆக இருக்கிறது. ஸ்டிரைக் ரேட் 145.97ஆகவும் இருப்பது கவனிக்கத்தக்கது.
ஐபிஎல் தொடரில் பட்லர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடுகிறார். கடந்த 2025 ஐபிஎல் சீசனில் 500 ரன்களை கடந்ததும் குறிப்பிடத்தக்கது.
பட்லருக்கு முன்பாக அலெக்ஸ் ஹேல்ஸ் 13,814 ரன்கள் குவிக்க, முதலிடத்தில் கிறிஸ் கெயில் 14,562 ரன்களுடன் இருக்கிறார்.
ஜாஸ் பட்லர் கூடுதலாக 1,500 ரன்கள் எடுத்தால் உலக சாதனை படைக்க வாய்ப்பிருக்கிறது.