’14 கோடிக்கு சென்னை அணி வாங்கிய பிரஷாந்த் வீர்!’ – யார் இவர்? |“Who Is Prashanth Veer, Bought by the Chennai Team for ₹14 Crore?”

Spread the love

20 வயதான பிரஷாந்த் வீர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர். UP T20 லீகில் நொய்டா சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்தார். கடந்த சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 320 ரன்களை 155 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருந்தார். அவருக்குதான் Emerging Player of The Year விருதும் வழங்கப்பட்டது.

அதேமாதிரி, சையத் முஷ்தாக் அலி தொடரிலும் 7 போட்டிகளில் 112 ரன்களை 170 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருந்தார். 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார். ஜடேஜாவுக்கு சரியான ரீப்ளேஸாக இருப்பார் என்பதால் அவரை சென்னை அணி கவனத்தில் கொண்டது. ட்ரையல்ஸூக்கும் அழைத்தது. அதைத்தொடர்ந்தே ஏலத்தில் ரூ.14.20 கோடிக்கு அவரை வாங்கியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *