14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்!

Dinamani2f2024 10 032fqgf1fx0p2fsecrateriate Edi 640.jpg
Spread the love

தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி முதல்வராக ராமலட்சுமியும், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராக சிவசங்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்தபடி அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிக்கு, சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குநர் ஜி.சிவசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு ராஜீவ் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் எம். பவானி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக டி. ரவிக்குமாரும், கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி முதல்வராக ராமலட்சுமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கேஏபி விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி முதல்வராக குமரவேலும், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக அருள் சுந்தரேஷ்குமார், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி முதல்வராக அமுத ராணி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக லியோ டேவிட் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக தேவி மீனால், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வராக கலைவாணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முழு விவரம் அறிய… அறிக்கையை கிளிக் செய்யவும்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *