15% ஏற்றத்துடன் வெற்றி ஓட்டத்தில் எடர்னல்!

dinamani2F2025 07 222F8nlfw3zw2Feternal
Spread the love

புதுதில்லி: ஜூன் வரையான காலாண்டு வருவாய்க்கு பிறகு, ஜொமாடோ மற்றும் பிளிங்கிட் பிராண்டுகளுக்குச் சொந்தமான உணவு விநியோக மற்றும் விரைவு வர்த்தக நிறுவனமான எடர்னல் பங்குகள் சுமார் 15 சதவிகிதம் உயர்ந்தன.

பிஎஸ்இ-யில் பங்கின் விலை 14.89 சதவிகிதம் உயர்ந்து ரூ.311.60 ஆக இருந்தது. இது 52 வாரத்தின் அதிகபட்சம் விலையாகும்.

என்எஸ்இ-யில் இதன் விலை 14.55 சதவிகிதம் உயர்ந்து ரூ.311.25 ஐ எட்டியது. நேற்றைய வர்த்தகத்தில் எடர்னல் பங்குகள் கிட்டத்தட்ட 6 சதவிகிதம் உயர்ந்தன.

எடர்னல் மீண்டும் எங்களை ஆச்சரியப்படுத்தியது என்றது பிளிங்கிட். 2024-25ஆம் ஆண்டின் 4வது காலாண்டு பிறகு எச்சரிக்கையான தொனிக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதாக ஜே.எம். பைனான்சியல் இன்ஸ்டிடியூஷனல் செக்யூரிட்டீஸ் லிமிடெட் தெரிவித்தது.

ஜூன் வரையான காலாண்டில் எடர்னல் ரூ.25 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டியதாக அறிவித்தது. கடந்த மார்ச் மாதத்தில் எடர்னல் என பெயரை மாற்றிகொண்ட இந்த நிறுவனம், முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ.253 கோடி நிகர லாபத்தை ஈட்டியது.

மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில், செயல்பாடுகளிலிருந்து நிறுவனத்தின் வருவாய் ரூ.7,167 கோடியாக இருந்தது. இதுவே ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.4,206 கோடியாக இருந்தது.

இதையும் படிக்க: சோலெக்ஸ் எனர்ஜியின் வருவாய் 84% அதிகரிப்பு!

Shares of food delivery and quick commerce firm Eternal, which owns the Zomato and Blinkit brands, on Tuesday jumped nearly 15 per cent after its June quarter earnings announcement.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *