2025ம் ஆண்டு சுதந்திர நாளை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் 10 காவல்துறை அதிகாரிகளுக்கு, 2025-ம் ஆண்டு சுதந்திர நாளை முன்னிட்டும், தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களின் விவரம்:
1. க.த. பூரணி, காவல் துணை கண்காணிப்பாளர் ,சென்னை.
2. பி. உலகராணி, காவல் ஆய்வாளர், திருநெல்வேலி.
3. மா.லதா, காவல் ஆய்வாளர், சென்னை.
4. மு.செந்தில்குமார், காவல் ஆய்வாளர், சேலம் மாவட்டம்.
5. ஜெ.கல்பனாதத், துணைக் காவல் கண்காணிப்பாளர், தஞ்சாவூர்.
6. வே.சந்தானலெட்சுமி, காவல் ஆய்வாளர், திண்டுக்கல்.
7. மா.வசந்தகுமார், காவல் ஆய்வாளர், திருப்பூர் மாவட்டம்.
8. வெ.ஜெகநாதன், காவல் ஆய்வாளர், வடக்கு காவல் நிலையம், திருப்பூர் மாநகரம்.
9. கோ.திலகாதேவி, காவல் ஆய்வாளர், அரியலூர்.
10. இரா.புவனேஸ்வரி, காவல் ஆய்வாளர், நாகப்பட்டினம்.