15 நண்பர்களுடன் சேர்ந்து கேரள நபர் வென்ற ரூ.60 கோடி ஜாக்பாட்! – அடடே ஸ்டோரி | Abu Dhabi Big Ticket: Kerala Man Wins ₹60 Crore Jackpot Along With 15 Friends

Spread the love

அபுதாபியில் நடைபெறும் பிரபலமான ‘பிக் டிக்கெட்’ டிராவில், கேரளாவைச் சேர்ந்த ஒருவர் 25 மில்லியன் திர்ஹம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 60 கோடி) பரிசை வென்றுள்ளார். கேரளாவைச் சேர்ந்த ராஜன் என்ற 52 வயது நபர், தனது நண்பர்களுடன் இணைந்து வாங்கிய டிக்கெட்டுக்கு இந்த அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது.

சவூதி அரேபியாவில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வரும் ராஜன், அங்குள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பிக் டிக்கெட் டிராவில் பங்கேற்று வருகிறார்.

இம்முறை தனது 15 சக ஊழியர்களுடன் இணைந்து பணம் திரட்டி டிக்கெட் வாங்கியுள்ளார்.

Lottery (representative)

Lottery (representative)
canva

கடந்த நவம்பர் 9ஆம் தேதி, ஆன்லைன் மூலம் இல்லாமல் நேரடியாக கவுண்டரில் இந்த டிக்கெட்டை வாங்கியுள்ளார். வாங்கப்பட்ட 282824 என்ற எண் கொண்ட டிக்கெட்டிற்கே இந்த மெகா பரிசு விழுந்துள்ளது.

இது குறித்து ராஜன் கூறுகையில், “பல ஆண்டுகளாக நம்பிக்கையுடன் காத்திருந்தேன். இறுதியில் அந்த அதிர்ஷ்டம் எங்களை தேடி வந்துள்ளது. பரிசுத் தொகையை சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளேன்” என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *