15 நாளில் பதில் இல்லை என்றால் சிறை நிரப்பும் போராட்டம்! – புதுச்சேரி அரசுக்கு எதிராக ஆர்ப்பரிக்கும் பாஜக முன்னாள் அமைச்சர் | BJP Ex minister protests against Puducherry government

1379037
Spread the love

புதுச்சேரியில் ஜான் குமாருக்கு அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என்பதற்காக, தங்கள் கட்சியைச் சேர்ந்த சாய் ஜெ.சரவணன்குமாரை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தது பாஜக தலைமை. அதேசமயம் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட ஜான் குமாருக்கு சுமார் 3 மாதங்கள் ஆகப்போகும் நிலையிலும் இன்னும் இலாகா ஒதுக்காமல் இருக்கிறார் முதல்வர் ரங்கசாமி.

இதனிடையே, பட்​டியல் இனத்​தைச் சேர்ந்த சாய் ஜெ.சர​வணன்​கு​மாரை அமைச்​சர​வையி​லிருந்து தூக்​கியது சர்ச்​சையை கிளப்​பியது. இந்த நிலை​யில், அரசுக்கு எதி​ராக பகிரங்​க​மாக வெடித்​திருக்​கும் சரவணன்​கு​மார், அமைச்​சர​வை​யில் பட்​டியல் இனத்​தவ​ருக்கு இடம் தரா​மல் ஒதுக்​கியது, கரசூரில் தொழிற்​சாலை​களை கொண்டு வரும் குழு​வில் தொகுதி எம்​எல்​ஏ​வான தன்னை சேர்க்​காமல் இருப்​பது உள்​ளிட்ட குற்​றச்​சாட்​டு​களை அடுக்கி இருக்​கி​றார். இதற்​கெல்​லாம் இன்​னும் 15 நாட்​களில் தீர்வு கிடைக்​கா​விட்​டால் தொகுதி மக்​களு​டன் சேர்ந்து சிறை நிரப்​பும் போராட்​டம் நடத்​து​வேன் என மிரட்​டி​யும் இருக்​கி​றார் சரவணன்​கு​மார்.

தேர்​தல் நெருங்​கும் வேளை​யில் ஆளும் கூட்​ட​ணி​யைச் சேர்ந்த முன்​னாள் அமைச்​சர் ஒரு​வர் இப்​படி தடாலடி காட்டி இருப்​பது புதுச்​சேரி பாஜக​வில் மாத்​திரமல்​லாது ஆளும் கூட்​ட​ணிக்​குள்​ளும் புகைச்​சலை உண்​டாக்கி இருக்​கிறது. இதனிடையே, “சட்​டம் – ஒழுங்கு கெட்​டு​விட்​டது. உள்​துறை அமைச்​சர் நமச்​சி​வா​யம் இதில் கவனம் செலுத்​த​வில்​லை. என்​க​வுன்​ட்டர் நடத்தி ரவுடிகளை கட்​டுப்​படுத்த வேண்​டும்” என்​றும் சரவணன்​கு​மார் வெடித்​திருக்​கி​றார்.

இதுபற்றி உள்துறை அமைச்சர் நமச்சி​வா​யத்​திடம் கேட்டதற்கு, “அமைச்சராக இருக்​கும்​போதெல்லாம் பேசாமல் இருந்​து​விட்டு, தற்போது சாய் ஜெ.சர​வணன்​குமார் இப்படி பேசுவது ஏன்? என்கவுன்ட்டர் செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. தவிர, என்கவுன்ட்டர் பற்றி எம்எல்ஏ ஒருவரே பேசுவது அபத்த​மானது” என்றார்.

என்.ஆர்​.​காங்​கிரஸ் தரப்பில் பேசிய​வர்கள், “சாய் ஜெ.சர​வணன்குமாரின் ராஜினா​மாவுக்கும் முதல்வர் ரங்கசாமிக்கும் எந்த சம்பந்​தமும் இல்லை. அதேசமயம், புதிதாக அமைச்​ச​ராக்​கப்பட்ட ஜான் குமார், லாட்டரி அதிபர் மார்ட்​டினின் மகனை புதுச்​சேரிக்கு அழைத்து வந்து அவரை வைத்து அரசை விமர்சனம் செய்வது ரங்கசாமிக்கு பிடிக்​க​வில்லை. இந்த விஷயத்தில் பாஜக தலைவர்கள் ஆழ்ந்த அமைதியில் இருப்பது தான் அவருக்கு இருக்கும் ஆகப்பெரிய வருத்தமே” என்கி​றார்கள்.

பாஜக வட்டாரத்​திலோ, “புதுச்சேரி பாஜகவில் மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்கள் தான் இப்போது ஆதிக்கம் செலுத்​துகின்​றனர். இப்போது நடக்கும் உட்கட்சி மோதல்​களுக்கு அதுவும் முக்கிய காரணம்” என்கின்​றனர். சாய் ஜெ.சர​வணன்​குமார் நீண்ட காலமாக பாஜகவில் இருப்​பவர். நமச்சி​வாயம் காங்கிரஸில் இருந்து வந்தவர் என்பது குறிப்​பிடத்தக்கது.

பாஜகவுக்குள் நடக்கும் இந்த மோதலானது தேர்தல் வெற்றிக்கு வேட்டு​வைக்​கலாம் என்பதால் முன்னாள் அமைச்​சரையும் இந்நாள் அமைச்​சரையும் சமாதானப்​படுத்தும் முயற்​சியில் பாஜக மேலிடத் தலை​வர்கள் ஈடு​பட்​டிருப்​ப​தாகச் சொல்​கிறார்​கள்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *