15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்: `தேங்காய்ப்பால் கொழுக்கட்டை' – வீட்டிலேயே செய்வது எப்படி?

Spread the love

தேங்காய்ப்பால் கொழுக்கட்டை

தேவையானவை:

அரிசி மாவு – அரை கப் + ஒரு டேபிள்ஸ்பூன்

தண்ணீர் – கால் கப் + ஒரு கப்

தேங்காய்ப்பால் – ஒரு கப்

வெல்லம் – 100 கிராம்

உப்பு – சுவைக்கேற்ப

ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை

துருவிய தேங்காய் – அலங்கரிக்க

செய்முறை:

கால் கப் தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அரை கப் அரிசி மாவில் இந்தத் தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து மென்மையாகப் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் இந்த மாவை சீடை வடிவில் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி தனியாக எடுத்துவைக்கவும். பொடித்த வெல்லத்தைச் சிறிது தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.

ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து தனியாக வைக்கவும். பின்னர் மீதமிருக்கும் ஒரு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் மாவு உருண்டைகளைச் சேர்த்து மாவு உருண்டைகள் வேகும்வரை கொதிக்கவிடவும்.

பிறகு இதனுடன் கரைத்துவைத்துள்ள அரிசி மாவைச் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்கவிடவும்.பின்னர் இதில் வெல்லம், ஏலக்காய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடவும். பின்னர் இதில் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். தேங்காய்த் துருவலால் அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *