15 நிமிடங்கள் முன்பு கூட வெற்றி சந்தேகம்: குகேஷ் ஆட்டம் பற்றி விஸ்வநாதன் ஆனந்த்

Dinamani2f2024 12 122fpwo2321s2fviswanathan Anand Gukesh Edi.jpg
Spread the love

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் கடைசி நேரம்வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான சீன வீரர் டிங் லிரெனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.

14 சுற்றுகள் கொண்ட உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 13 சுற்றுகள் வரை டிங் லிரென் – குகேஷ் தலா 6.5 புள்ளிகளைப் பெற்று சமநிலையில் இருந்தனர்.

இதனால் 14வது சுற்று விறுவிறுப்பாகத் தொடங்கியது. இந்தச் சுற்றும் சமநிலையையே எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டம் முடிவதற்கு சிறிதுநேரத்துக்கு முன்பு 55வது நகர்த்தலில் லிரென் செய்த தவறு குகேஷுக்கு சாதகமாக மாறியது. இதனைத்தொடர்ந்து 58வது நகர்த்தலில் ஆட்டத்தை முடித்து குகேஷ் வெற்றி பெற்றார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப்பில், தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை பட்டம் வென்றுள்ளார். அவருக்கு பின்னர், உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற தமிழர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளார்.

இதையும் படிக்க | நாளொன்றுக்கு 11 மணிநேரம் பயிற்சி: குகேஷ் பயிற்சியாளர்

மேலும், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வென்ற வீரர் என்ற சாதனையையும் குகேஷ் படைத்துள்ளார். ரஷிய வீரர் கேரி காஸ்பரோவ், இதுவரை அந்தப் பெருமை பெற்றிருந்தார். இவர் 22 வயதில் சாம்பியனானார். ஆனால், குகேஷ் இந்த சாதனையை 18 வயதில் முறியடித்துள்ளார்.

குகேஷ் வென்றது குறித்து விஸ்வநாதன் ஆனந்த் பேசியதாவது, ”உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை குகேஷ் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. டிங் லிரென் உடனான ஆட்டத்தில், 15 நிமிடங்களுக்கு முன்பு வரைகூட குகேஷ் வெல்வாரா? என்ற சந்தேகம் இருந்தது. நெருக்கடியில்தான் குகேஷின் திறமையான ஆட்டம் வெளிப்படும். முழு முயற்சியுடன் பயமில்லாமல் விளையாடி குகேஷ் வென்றுள்ளார்” எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | உலக சாம்பியன் பட்டம் வென்றார் குகேஷ்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *