உள்துறைச் செயலர் உள்பட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

Dinamani2fimport2f20212f62f92foriginal2ftnassembly.jpg
Spread the love

 

தமிழக உள்துறைச் செயலர் உள்பட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உள்துறைச் செயலர் அமுதா அமுதா வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறைச் செயலராக தீரஜ் குமார் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலராக பொறுப்புவகித்த வி. ராஜாராமன் ஐ.ஏ.எஸ். தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Amudha IAS DIN
வருவாய் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ள அமுதா ஐ.ஏ.எஸ்

சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு, பள்ளிக்கல்வித் துறை செயலராக இருந்த ஜெ. குமரகுருபரன் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராகவும், கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக இருந்த டாக்டர் ஜெ. விஜயா ராணி இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் உணவு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத்துறை கூடுதல் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். சிட்கோ மேலாண் இயக்குநராக செயல்பட்ட எஸ். மதுமதி ஐ. ஏ. எஸ். பள்ளிக்கல்வித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உணவு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத்துறை கூடுதல் முதன்மைச் செயலராக பொறுப்புவகித்த டாக்டர் கே. கோபால் ஐ. ஏ. எஸ். கால்நடை , மீன்வளம் மற்றும் பால்வளத்துறை கூடுதல் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ias%20transff1
ias%202
ias%203

பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலராக(ஆணையர்) பொறுப்புவகித்த ஹர் சஹாய் மீனா ஐ.ஏ.எஸ். சிறப்பு புத்தாக்கத்துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் ஆட்சியர் பி.விஷ்ணு சந்திரன், ராணிப்பேட்டை ஆட்சியர் எஸ். வளர்மதி, அரியலூர் ஆட்சியர் ஜெ. ஆனி மேரி சுவர்ணா, கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜதாவத் ஆகியோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *