அதில், பத்மநாபசுவாமி உருவம் பொறித்த தங்கப் பதக்கம் மற்றும் சங்கிலி (1 பவுன்),
ஆரஞ்சு நிறப் பவளம் மற்றும் தங்க முத்துகள் பதிக்கப்பட்ட சங்கிலி (அரை பவுன்),
பிச்சிப்பூ மொட்டு வடிவிலான தங்கக் கொலுசு (3 பவுன்),
கருப்பு மற்றும் தங்க முத்துகள் கலந்த கொலுசு (2 பவுன்),
அகலமான இலை வடிவிலான இரண்டு வளையல்கள் (4 பவுன்),
அகலம் குறைந்த 2 தங்க முறுக்கு வளையல்கள் (3 பவுன்),
சிவப்பு கல் பதித்த பெரிய இரண்டு கம்மல்கள் (3 பவுன்),
பச்சை எனாமல் இரண்டு இலைகள் மற்றும் வெள்ளை எனாமல் சங்கு பதித்த தங்கப் பதக்கம் மற்றும் தங்க முறுக்குச் சங்கிலி (2.5 பவுன்),
தங்கக் குழி மின்னுமாலை (5 பவுன்),
எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பச்சைக்கல் பதித்த நாகபடம் கம்மல்,
மாலை மற்றும் பதக்கம் (4 பவுன்),
தங்கக் கம்மல் மற்றும் இலை வடிவிலான மாட்டி (2 பவுன்),
ரூபி கற்கள் மற்றும் வைரங்கள் பதித்த அகலமான 2 வளையல்கள் (6 பவுன்),
ஒரு பவுன் வீதம் உள்ள 5 குதிரைப்பவுன் நாணயங்கள் என 40 பவுனுக்கும் அதிகமான நகைகள் திருடப்படுள்ளதாக தெரியவந்துள்ளது.