இப்படையின் பெரும்பாலான செயல்கள் வெளியில் வருவது கிடையாது. ஒரு சில ஆபரேசன்கள் மட்டும் வெளிச்சத்திற்கு வருவதுண்டு. 2001ம் ஆண்டு ஒசாமா பின்லேடனை தேடி அழித்தது, பாக்தாத் விமான தாக்குதல், சதாம் உசேனை பிடித்தது, சோமாலியா தாக்குதல் என அவர்களின் சில நடவடிக்கைகளை சொல்ல முடியும்.
நிகோலஸை பிடிக்க டெல்டா போர்ஸில் இரவு நேரங்களில் மட்டும் தாக்குதல் நடத்துவதில் மிகவும் புகழ்பெற்ற 160th SOAR என்ற படைப்பிரிவு பயன்படுத்தப்பட்டது. இப்படையில் 20 வயது முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இடம் பெற்று இருப்பார்கள்.
150 விமானங்கள்
நிகோலஸை பிடிப்பதற்கு அமெரிக்க படைகள் 150 போர் விமானங்களை பயன்படுத்தி இருக்கின்றன. குறிப்பாக B-1 Lancers, F-22 Raptors, F-35 Lightning IIs, F/A-18 Super Hornets, EA-18 Growlers மற்றும் E-2 Hawkeyes போன்ற போர் விமானங்கள் வெனிசுலா அதிபரை பிடிக்கும் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டன.
இது தவிர உளவு பார்க்கவும், கண்காணிக்கவும் “Wraith” அல்லது “The Beast of Kandahar” என்று அழைக்கப்படும் RQ-170 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டது. உளவு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு அமெரிக்க ஆளில்லா விமானமும் இப்பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக சி.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிகோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் பிடித்தவுடன் அவரை முதலில் அமெரிக்க ராணுவ தளத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் USS Iwo Jima என்ற உயர் திறன் கொண்ட கப்பல் மூலம் நியூயார்க்கிற்கு கொண்டு செல்லப்பட்டார்.
USS Iwo Jima (LHD-7) என்பது ஒரு மினி விமானம் தாங்கி போர்க்கப்பல் போல வேலை செய்யும் ஒரு பெரிய அமெரிக்க கடற்படைக் கப்பல் ஆகும். இது 840 அடி நீளமும், 140 அடி அகலத்தில் விமான தளமும் கொண்டது. கப்பல் கடற்படைகள் இந்த கப்பலில், ஹெலிகாப்டர்கள், ஜெட் விமானங்கள் மற்றும் படகுகளை கொண்டு செல்ல முடியும், நிகோலஸை பிடிக்கும் ஆப்ரேசனில் வெனிசுலாவை சேர்ந்த 24 பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டனர் என்ற தகவலும் வெளியானது.