அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக காசிரங்கா தேசிய பூங்காவில் இதுவரை 159 வன விலகுங்கள் உயிரிழந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
காசிரங்கா தேசிய பூங்காவின் இயக்குனர் கோனாலி கோஷ் கூறுகையில், அசாமில் கனமழையால் ஏற்பட்டவெள்ளப்பெருக்கில் இதுவரை 159 வன விலங்குகள் இறந்துள்ளன.
வெள்ள நீரில் மூழ்கி 128 மான்கள், 9 காண்டாமிருகங்கள், 2 சதுப்புநில மான்கள் உள்ளிட்ட 159 வன விலங்குகள் இறந்துள்ளன.
அதேசமயம் 12 மான்கள், நீர் நாய் உள்ளிட்ட 133 விலங்குகளை மீட்டுள்ளோம். பூங்காவில் 111 விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மேலும் 7 விலங்குள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
காசிரங்கா பூங்காவில் மொத்தம் 233 வன முகாம்கள் உள்ளதாகவும், தற்போது வெள்ள நிலைமை ஓரளவு மேம்பட்டு வருகின்றது. ஆனால் பூங்காவில் உள்ள 62 வன முகாம்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், அவற்றில் நான்கு முகாம்கள் காலி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் அசாமில் பெய்த கனமழை. நிலச்சரிவுகளால் அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7 பேர் பலியாகியுள்ள நிலையில் இதுவரை வெள்ளம் தொடர்பான பல்வேறு சம்பவங்களில் சுமார் 79 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநிலத்தில் 26 மாவட்டங்களில் 17.17 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் என்டிஆர்எப், எஸ்டிஆர்எப், தீயணைப்பு மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் மீட்புக் குழுக்கள் அனைத்தும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.