மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் 140 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவனை 16 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட் நிலையில் அச்சிறுவன் பலியானார்.
குணா மாவட்டத் தலைமையகத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ரகோகர் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பிப்லியா கிராமத்தில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சுமித் மீனா என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை வெளியே கொண்டு வந்தபோது, சுயநினைவு இல்லாத நிலையில் சிறுவன் இருந்துள்ளார்.
அச்சிறுவனின் உயிரைக் காப்பாற்ற ரகோகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக குணா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சீவ் சின்ஹா தெரிவித்தார்.
குணா மாவட்ட தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி ராஜ்குமார் ரிஷிஷ்வர் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ”சுமித் மீனா இறந்துவிட்டார்” என்று தெரிவித்தார்.