சான்பிரான்சிஸ்கோ: உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல், நடப்பு காலாண்டில் சுமார் ஒன்றரை பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டதால் 18,000 (15%) பணியாளர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், இதன்மூலம் ரூ. 83,000 கோடி மதிப்பிலான செலவைக் குறைக்கப் போவதாக இன்டெல் தெரிவித்துள்ளது.
உலகின் முன்னணி அமெரிக்க சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் கடந்த ஆண்டு இறுதியில் 1,24,800 பணியாளர்களைக் கொண்டிருந்தது.
தற்போது சாம்சங், டிஎஸ்எம்சி, எஸ்கே ஹைனிக்ஸ் போன்ற பல சிப்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வந்தாலும், இன்டெல் சிப் தனித்துவத்தை முறியடிக்கமுடியவில்லை என்றே கூறலாம்.
ஆனால், ஏஐ சிப்களுக்கான சந்தையில் இன்டெல் பின்தங்கி இருப்பதால் இந்த ஆண்டில் இதுவரை அதன் பங்குகள் 40 சதவீதத்துக்கும் அதிகமாகக் குறைத்துள்ளது. இந்த பெரும் சரிவை மீட்டெடுப்பதற்கு இன்டெல் ஆகஸ்ட்-1 ஆம் தேதி அதிர்ச்சிகரமான திட்டம் ஒன்றை அறிவித்தது. அதாவது, இன்டெல் பணியாளர்களில் 18,000 பணியாளர்களை(15%) பணி நீக்கம் செய்வது, குறிப்பிடத்தக்க செலவு-குறைப்பு உள்ளிட்ட திட்டத்தை அறிவித்தது.
இதனால் நடப்பாண்டில் இன்டெல் நிறுவனத்தின் ரூ. 83,000 கோடி (10 பில்லியன் டாலர்) மதிப்பிலான செலவைக் குறைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையை அமல்படுத்தப்படும் நிலையில் சுமார் 18,000 பணியாளர்கள தங்களது பணிகளை இழக்க நேரிடும்.