பி.எப்.பில் 19.50 லட்சம் பேர் மே மாதத்தில் சேர்ப்பு

Epfo
Spread the love

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO), 2024 மே மாதத்தில் மொத்தம் 19.50 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. 2018ம் ஆண்டு தரவுகள் வெளியிடப்படுவதில் இருந்து இது மிக அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

உறுப்பினர் சேர்க்கை

Epfo 2

ஆண்டு பகுப்பாய்வில் மே 2023 உடன் ஒப்பிடும்போது நிகர உறுப்பினர் சேர்த்தலில் 19.62% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதிகரித்த வேலை வாய்ப்புகள், ஊழியர்களுக்கான நலத் திட்டங்கள் குறித்து வளர்ந்து வரும் விழிப்புணர்வு, இபிஎஃப்ஓ-வின் மக்கள் தொடர்பு விழப்புணர்வுத்  திட்டங்கள் உள்ளிட்ட பல காரணிகளால் உறுப்பினர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

மே 2024-ல் சுமார் 9.85 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக தரவு சுட்டிக்காட்டுகிறது. முந்தைய 2024 ஏப்ரல்  மாதத்தை ஒப்பிடுகையில் புதிய உறுப்பினர்களில் 10.96% அதிகரித்துள்ளது.  முந்தைய ஆண்டு 2023 மே மாதத்தை விட 11.5% அதிகரித்துள்ளது.

பெண் உறுப்பினர்கள்

தரவின் குறிப்பிடத்தக்க அம்சம் 18-25 வயதுக்குட்பட்டவர்கள் அதிகம் என்பதாகும்.  2024 மே மாதத்தில் சேர்க்கப்பட்ட 18 முதல் 25 வயதுடையவர்களில் 58.37% புதியவர்கள் ஆவார்கள்.

மே மாதத்தில் சேர்க்கப்பட்ட புதிய உறுப்பினர்களில் சுமார் 2.48 லட்சம் பேர் புதிய பெண் உறுப்பினர்கள் ஆவார்கள்.

ஊதிய தரவுகளின் மாநில வாரியான பகுப்பாய்வில், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், ஹரியானா ஆகிய ஐந்து மாநிலங்களில் நிகர உறுப்பினர் சேர்க்கை மிக அதிகமாக இருந்தது. இந்த மாநிலங்கள் நிகர உறுப்பினர் சேர்க்கையில் சுமார் 58.24%  பங்கைக் கொண்டுள்ளன.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் கைது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *