இவற்றில் எந்தத்துறையில் எந்தப் படிப்பைத் தேர்வு செய்வது?, எந்தப் படிப்புக்கு நல்ல எதிர்காலம்? என்பது மிகப்பெரிய கேள்வி. இந்தக் காலக்கட்டத்தில் பக்கத்து வீட்டுக்காரர், எதிர் வீட்டுக்காரரெல்லாம், “இந்த காலேஜ் போ”, “அந்தப்படிப்பைப் படி” என்று அட்வைஸ் செய்வார்கள். வெளியூரிலிருக்கிற உறவுக்காரர், அவரது அனுபவத்திலிருந்து ஒரு அறிவுரையை வழங்குவார். உடன் படித்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர் என எல்லோரும் ஆளுக்கொரு விஷயத்தைச் சொல்லிக் குழப்புவார்கள்.
போதாக்குறைக்கு பிளஸ்டூ மாணவர்களின் பெற்றோருக்கு தினமும் 10 அழைப்பாவது அலைபேசியில் வந்துவிடுகிறது, “எங்கள் கல்லூரிக்கு வாருங்கள்” என்று. இன்னும் இரண்டாம் நிலை நகரங்களில் போலி கல்வியாளர்கள் தலையெடுத்து அட்வைஸ் செய்து ஒன்றுக்கும் ஆகாத கல்லூரிகளில் மாணவர்களைக் கொண்டு போய் சிக்க வைத்து விடுகிறார்கள்.
இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியில்தான் பெற்றோரும் மாணவர்களும் அடுத்த கட்டத்துக்கான படிப்பையும் கல்லூரியையும் தேர்வு செய்யவேண்டும். இந்தச்சூழலில் எவ்விதக் குழப்பமும் இல்லாமல் உங்களுக்குப் பொருத்தமான படிப்பையும் கல்லூரியையும் தேர்வு செய்ய உதவும் வகையில், கல்வி விகடனும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையமும் இணைந்து வரும் 25.04.2026 சனிக்கிழமை, “+2-வுக்குப் பிறகு என்ன படித்தால் எதிர்காலம்’ என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கே கிளிக் செய்க https://forms.gle/mkX53JaTLuszofAt8
சென்னை, ராயப்பேட்டை திரு.வி.க நெடுஞ்சாலையில், அஜந்தா ஹோட்டல் பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் இந்திய அலுவலர் சங்க அரங்கத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 1 மணி வரை நடக்கவுள்ள இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பெற்றோரும் மாணவர்களும் பங்கேற்கலாம். அனுமதி இலவசம், முன்பதிவு முக்கியம்!
இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் தமிழகத்தின் முதன்மையான கல்வியாளர்கள் நான்கு பேர் கலந்து கொண்டு உங்களுக்கு வழிகாட்ட இருக்கிறார்கள்.
25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டியுள்ள அனுபமிக்க கல்வியாளர் தா.நெடுஞ்செழியன், ‘உலகளாவிய கல்வி வாய்ப்புகள்’ குறித்து உரையாட உள்ளார். தா.நெடுஞ்செழியன், கல்வி தொடர்பாக ஏராளமான தொலைக்காட்சி, வானொலி, சமூக வலைதள நிகழ்ச்சிகள், கருத்தரங்குகளில் பங்கேற்றவர்.
அரசின் பல்வேறு கல்விக் குழுக்களில் உறுப்பினராக அங்கம் வகித்துள்ளார். ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை சார்ந்து 5 நூல்களை எழுதியுள்ளார். தமிழகத்தின் எளிய குடும்பங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்களை ஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற மத்திய அரசின் பல உயராய்வு மையங்களுக்கு அனுப்பியவர். நிகழ்வில் மாணவர்கள், பெற்றோரின் கேள்விகளுக்கும் இவர் பதில் அளிக்க உள்ளார்.