ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக்கில் இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா ஏமாற்றம் அளித்தார்.
இந்தத் தொடரில் ஜெர்மனியின் ஜுலியன் வெபர் தன்னுடைய ஆறு வாய்ப்புகளில் இரண்டு முறை 90 மீட்டருக்கு அதிகமாக ஈட்டி எறிந்து அசத்தினார். அதில் அதிகபட்சமாக 91.51மீட்டருக்கு எறிந்திருந்தார்.
இரண்டு முறை டைமண்ட் லீக்கில் ரன்னர் -அப்பாகி இருந்த ஜுலியன் வெபர் தற்போது முதல்முறையாக கோப்பையை வென்றுள்ளார்.
நீரஜ் சோப்ரா 85.01 மீட்டருக்கு எறிந்து இரண்டாமிடம் பிடித்தார். அடுத்த மாதம் டோக்கியோவில் நடைபெற இருக்கும் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வெல்லும் முனைப்பில் இருக்கிறார்.