தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது அரையிறுதியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. முதலாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி முதலாவதாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.
இந்த நிலையில் மற்றும் இறுதிப் போட்டியாளர் யார்? என்பதைத் தீர்மானிக்கும் 2-வது அரையிறுதிப் போட்டி பாகிஸ்தானின் கடாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சாண்ட்னர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் பதிலாக அணியில் கேப்டன் டெம்பா பவுமா இணைந்துள்ளார்.
இதுவரை இவ்விரு அணிகளும் 73 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் தென்னாப்பிரிக்க அணி 42 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 26 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. 5 போட்டிகளில் முடிவில்லை.
நியூசிலாந்து
மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவான் கான்வே, கைல் ஜேமிசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ’ரூர்க், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, நாதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங், ஜேக்கப் டஃபி.
தென்னாப்பிரிக்கா
டெம்பா பவுமா (கேப்டன்), கார்பின் போஷ், டோனி டி ஜோர்ஜி, மார்கோ யான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகாராஜ், எய்டன் மார்க்ராம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி நிகிடி, காகிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, ராஸ்ஸி வான் டெர் டுசென்.