2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!

dinamani2F2025 09 042F9q0s56jf2FAP25247502364306
Spread the love

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் திடலில் இன்று (செப்டம்பர் 4) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்க அணி முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் மேத்யூ பிரீட்ஸ்க் அதிகபட்சமாக 77 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

அவரைத் தொடர்ந்து, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (58 ரன்கள்), அய்டன் மார்க்ரம் (49 ரன்கள்), டெவால்ட் பிரேவிஸ் (42 ரன்கள்), ரியான் ரிக்கல்டான் (35 ரன்கள்) எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அடில் ரஷீத் 2 விக்கெட்டுகளையும், ஜேக்கோப் பெத்தேல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

South Africa, batting first in the second ODI against England, scored 330 runs for the loss of 8 wickets.

இதையும் படிக்க: அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *