2 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் | 2 Additional coaches in express trains

1370515
Spread the love

சென்னை: பயணிகள் கூட்டம் அதிகம் உள்ள ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகின்றன.

அந்த வகையில், சென்னை சென்ட்ரல் – ஆந்திர மாநிலம் விஜயவாடா பினாகினி விரைவு ரயிலில் ஜூலை 26-ம் தேதி முதல் இரு மார்க்கத்திலும் 3-ம் வகுப்பு ஒரு ஏசி பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது.

இதுபோல, மன்னார்குடி – திருப்பதி விரைவு ரயிலில் ஜூலை 27-ம் தேதி முதல் 3-ம் வகுப்பு ஒரு ஏசி பெட்டி, 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் நிரந்தரமாக இணைத்து இயக்கப்பட உள்ளன. தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *