மும்பை:
கொல்கத்தாவில் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி அடங்காத நிலையில் மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் ஒரு பள்ளியில் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பத்லாபூரில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் படிக்கும் 3 மற்றும்4 வயதுடைய இரண்டு சிறுமிகளிடம் பள்ளியின் தொழிலாளியாக வேலைபார்த்து வந்த வாலிபர் ஒருவர் கடந்த பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளார். இந்த சம்பவம் பள்ளியின் கழிவறையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்
இச்சம்பவம் குறித்து இரு குழந்தைகளும் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள் பத்லாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது 11 மணி நேரம் காத்திருக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை கண்டித்து இன்று(20ந்தேதி) பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது பள்ளியின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதனால் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் தப்பி வெளியே ஓடினர்.
தண்டவாளத்தில் அமர்ந்து
இதற்கிடையே சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும் பத்லாபூர் ரெயில் நிலையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டன். அவர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டானர். இதனால் அவ்வழியே இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டது.
கனகசபை மீது நின்று தரிசனம்: உயர் நீதிமன்றத்தில் பொது தீட்சிதர்கள் விளக்கம்
போராட்டக்கரார்களிடம் வந்து போலீசார் முதலில் பேச்சுவார்த்தை நடத்தியபோது கடும் மோதல் ஏற்பட்டது. மறியிலில் ஈடுபட்டவர்கள் தண்டவாளத்தில் இருந்த கற்களை போலீசார் மீதி வீசினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கண்ணீர் புகைகுண்டு வீசப்பட்டது. கூடுதல் போலீசார் மற்றும் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அங்கு மறியிலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் போராட்டக்காரர்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர்.
ல் நிலையத்தில் குவிந்ததை அடுத்து, அரசு உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எனினும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், கடமை தவறிய பத்லாபூர் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி இடைநீக்கம்
இந்நிலையில், பள்ளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை விசாரிக்கும் பணியில் தவறியதாகக் கூறி, மூன்று போலீஸ் அதிகாரிகளை மகாராஷ்டிர அரசு பணி இடைநீக்கம் செய்துள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள துணை முதல்வரும் உள்துறை அமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ், “பத்லாபூர் காவல் நிலையத்தில் கடமை தவறியதற்காக மூத்த காவல் ஆய்வாளர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமைக் காவலர் ஆகியோரை உடனடியாக இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தானே காவல் துறை ஆணையருக்கு பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே பள்ளிச் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படும் பள்ளி உதவியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி நிர்வாகம் தாமதமாக முன்வந்து இச்சம்பவத்துக்கு பொறுப்பான தலைமையாசிரியர், வகுப்பு ஆசிரியர் மற்றும் ஒரு பெண் உதவியாளர் ஆகியோரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், நடந்த இந்தச் சம்பவத்துக்காக மன்னிப்பு கோருவதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தீர்ப்பில் நீதிபதிகளின் தனிப்பட்ட கருத்துகள் இருக்கக்கூடாது