தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினர் மந்திரம். இவர்கள் 2 பேரும் தளவாய்புரம் பகுதியிலுள்ள மதுபானக் கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, இவர்களது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த கோமு என்பவர், “என்னுடைய மனைவி தங்கத்தாய் பிரிந்து சென்றதற்கு நீங்கள்தான் காரணம்” எனக்கூறி இருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றவே மறைத்து வைத்திருந்த அரிவாளால் முருகன் மற்றும் மந்திரத்தை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மதுபானக்கூடத்தில் இருந்தவர்கள், பலத்த காயம் அடைந்த இருரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், முருகன் இறந்து விட்டதாக கூறினார். மந்திரம் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.