பாஸ்டேக் ஒட்டாத வாகனங்களுக்கு 2 மடங்கு சுங்கக் கட்டணம்

Npci Paytm Debunk Fastag Scam Videos
Spread the love

சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் நுழைவு கட்டணம் பாஸ்டேக் முறையில் முறையில் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. எனினும் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களின் முகப்பு கண்ணாடியில், வேண்டுமென்றே பாஸ்டேக் வில்லைகள் ஒட்டாமல் இருப்பதை தடுக்க, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது

Fastag

பாஸ்டேக்

இதன்படி, முகப்பு கண்ணாடியின் உள்பக்கத்தில் பாஸ்டேக் வில்லை ஒட்டாத வாகனங்கள் சுங்கச்சாவடியை கடக்கும் போது அந்த வாகனங்களுக்கு 2 மடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பாஸ்டேக் வில்லைகளை வேண்டுமென்றே ஒட்டாமல் வருவதால் சுங்கச்சாவடிகளில் தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்துவதுடன், தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துவோருக்கு அசவுகரியங்களையும் ஏற்படுத்துகிறது.

Fastags

2 மடங்கு கட்டணம்

எனவே நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 45,000 கி.மீ. தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 1000 சுங்கச்சாவடிகளில், பாஸ்டேக் இல்லாத வாகனங்களிடம் இருமடங்கு கட்டணம் வசூலிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.
இந்த நடவடிக்கை, தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோருக்கு தடையற்ற, சுகமான பயணத்தை உறுதி செய்யும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

அமர்நாத்: 19 நாள்களில் 3.5 லட்சம் பேர் தரிசனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *