இது குறித்து முதுமலை புலிகள் காப்பக நிர்வாகத்தினர் , ” பழங்குடி பெண்ணை தாக்கியதாக சந்தேகப்படும் குறிப்பிட்ட அந்த புலி நடமாடும் பகுதியில் பிரத்தியேகமான ஐந்து கூண்டுகளை வைத்திருக்கிறோம். 20 அடி நீளம், 10 அடி உயரம், 10 அடி அகலம் கொண்ட கூண்டுக்குள் 360 டிகிரி கோணத்தில், 24 மணி நேரமும் சுழலும் சி.சி.டி.வி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

வனத்துறையின் 50 பணியாளர்கள் களத்தில் உள்ளனர். அக்கம் பக்கத்தில் உள்ள பள்ளி மாணவர்களை வனத்துறை வாகனம் மூலம் பாதுகாப்பாக அழைத்துச் சென்று வருகிறோம். இந்த பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதையும், இரவு நேரங்களில் மக்கள் வெளியே நடமாடுவதையும் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம் ” என தெரிவித்துள்ளனர்.