“20 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்!” – தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரின் அதிரடி கோரிக்கை. | “Cancel Elections in 20 Constituencies!” – Tamilaga Vazhvurimai Katchi Leader’s Bold Demand.

Spread the love

மேலும், தேர்தல் அதிகாரிகளை நேரில் சந்தித்து, மனுவில் ஏதேனும் சந்தேகங்களோ அல்லது குறைகளோ இருக்கிறதா என்பதையும் உறுதி செய்த பின்னரே வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், தேர்தல் நடத்தும் தேர்தல் அலுவலர்கள் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க போன்ற கட்சிகளோடு இணைந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேட்புமனுக்களை நிராகரித்திருக்கின்றனர். வேண்டுமென்றே திட்டமிட்டு எங்கள் வேட்புமனுக்களை நிராகரித்திருக்கிறார்கள்.

ஏன் நிராகரித்தீர்கள் என்று எங்கள் வேட்பாளர்கள் கேள்விகளை எழுப்பியபோது மிக மிக சாதாரணக் காரணங்களையே சொல்கின்றனர்.

வேல்முருகன்

வேல்முருகன்

ஜனநாயக ரீதியாகப் போட்டியிட விரும்பும் எங்களைப் போன்ற கட்சிகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே, அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த நிராகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

வேட்புமனுக்களில் உள்ள மிகச் சாதாரணமான சந்தேகங்கள் மற்றும் சிறிய பிழைகளைச் சரிசெய்து வருமாறு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவுறுத்தியிருந்தனர். அதன்படி, அந்தச் சிறிய குறைகளைச் சரிசெய்து கொண்டு வேட்பாளர்கள் குறித்த நேரத்திற்குச் சென்றபோதிலும், “நேரம் முடிந்துவிட்டது” எனக் கூறி அவர்களின் மனுக்களை ஏற்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *