அந்த அறிக்கையில் நடிகை, “டிசம்பர் 12, 2025… 8 ஆண்டுகள், 9 மாதங்கள், 23 நாள்களுக்குப் பிறகு, மிக நீண்ட மற்றும் வேதனையான பயணத்தின் முடிவில் நான் இறுதியாக ஒரு சிறிய ஒளிக்கீற்றைக் கண்டேன். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆறு பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதற்காக நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.
இந்தத் தருணமானது, என் வலியை ஒரு பொய் என்றும், இவ்வழக்கை புனைகதை என்றும் கூறியவர்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இன்று நீங்கள் உங்களைப் பற்றியே மன அமைதியுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
மேலும், இதில் A1 எனது தனிப்பட்ட ஓட்டுநர் என்று தொடர்ந்து கூறிக்கொண்டிருப்பவர்களுக்கு அது முற்றிலும் பொய். அவர் என் ஓட்டுநர் அல்ல, என் ஊழியர் அல்ல, எனக்குத் தெரிந்தவரும் அல்ல.

2016-ல் நான் பணியாற்றிய ஒரு திரைப்படத்துக்கு ஓட்டுநராக நியமிக்கப்பட்ட ஒரு சாதாரண நபர் அவர். அந்த நேரத்தில் நான் அவரை ஒன்றிரண்டு முறை மட்டுமே சந்தித்தேன்.
அதன் பிறகு, இந்தக் குற்றம் நடக்கும் நாள் வரை ஒருபோதும் அவரைச் சந்தித்ததில்லை. தயவுசெய்து தவறான கதைகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்.
இந்தத் தீர்ப்பு பலரை ஆச்சர்யப்படுத்தியிருக்கலாம். ஆனால், அது என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை. 2020 தொடக்கத்திலேயே, ஏதோ சரியில்லை என்று நான் உணரத் தொடங்கினேன்.
அரசுத் தரப்பு கூட, வழக்கு கையாளப்பட்ட விதத்தில் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட குற்றவாளியின் விஷயத்தில் ஏற்பட்ட மாற்றங்களைக் கவனித்தது.