2025 Rewind: வங்கதேசம், நேபாளம் முதல் பிரான்ஸ் வரை – எதற்கு போராட்டங்கள் நடந்தன?|Gen Z போராட்டங்கள்

Spread the love

ஏ.ஐ, டெக்னாலஜி என ஒரு பக்கம் கலகலக்க, இன்னொரு பக்கம், இந்த ஆண்டு, பல நாடுகளில் போராட்டங்களும், புரட்சிகளும் வெடித்தன.

உலக வரலாற்றில் மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பின் தான் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் நடந்திருக்கின்றன. அதே மாதிரி இந்த ஆண்டு மாற்றங்களை முன்னெடுத்து பல நாடுகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுவும் இந்த ஆண்டு போராட்டங்களையும், புரட்சிகளையும் முன்னெடுத்தது பெரும்பாலும் ஜென் Z-யினர்.

இனி இந்த ஆண்டு (2025) நடந்த போராட்டங்களைப் பார்ப்போம்.

Mali | மாலி
Mali | மாலி

பிப்ரவரி – இந்தோனேசியாவில் ஊழல் மற்றும் கொள்கை எதிர்ப்பு போன்றவைகளுக்கு போராட்டங்கள் நடந்தன. இது ஆகஸ்ட் மாதம் வரை நீடித்தது.

மே 3 – மாலியில் ராணுவ ஆட்சி தொடர்ந்து நீடித்து வருவதை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன.

மே 14 – மங்கோலியாவில் ஊழலை எதிர்த்து போராட்டம் நடந்தது. இதனால், ஜூன் மாதம், அந்நாட்டின் பிரதமர் லுவ்சன்னம்ஸ்ரைன் ஓயுன்-எர்டெனே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

செப்டம்பர் 8 – நேபாளத்தில் சமூக வலைதளத் தடை மற்றும் ஊழலுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இதன் விளைவாக, அந்த நாட்டின் அப்போதைய பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி ராஜினாமா செய்தார்.

செப்டம்பர் 12 – எரிபொருள் மானிய நீக்கத்தைக் கண்டித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கோரிக்கையைக் கோரியும் எக்வடாரில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டம் செப்டம்பர் மாதம் வரையில் தொடர்ந்தது. அந்த நாட்டின் அதிபர் டேனியல் நோபோவா அவசரநிலையை பிரகடனப்படுத்தியும், போராட்டங்கள் நிற்கவில்லை.

செப்டம்பர் 13 – பெருவில் அதிபர் டீனா போலுவார்டே அரசாங்கம் அமல்படுத்திய ஓய்வூதிய சீர்திருத்தத்தை எதிர்த்து ஜென் Z போராட்டம் நடத்தினர். ஒரு மாதத்திற்கு மேல் தொடர்ந்த இந்தப் போராட்டம், இடைக்கால தீர்வின் அடிப்படையில் கைவிடப்பட்டது.

போராட்டம் | March for Australia
போராட்டம் | March for Australia

செப்டம்பர் 15 – திமோர்-லெஸ்டேவில், ஜோசே ரமோஸ்-ஹோர்தாவின் அரசாங்கத்திற்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டனர். இந்தப் போராட்டம் அரசியல் தலைவர்களுக்கு கிடைக்கும் சொகுசு சலுகைகளை எதிர்த்து நடந்தது.

செப்டம்பர் 16 – ஈரானில் கட்டாய ஹிஜாப் சட்டம் மற்றும் பெண்கள் உரிமைகளுக்கு எதிராக உச்சத் தலைவர் அலி கமேனி மற்றும் அரசுக்கு எதிராகத் தொடர்ச்சியாக பல போராட்டங்கள் நடைபெற்றன.

செப்டம்பர் – ஆஸ்திரேலியாவில் இந்தியர்களின் குடியேற்றத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன.

நவம்பர் 15 – மெக்சிக்கோவில் கார்டெல் வன்முறை, ஊழல் மற்றும் அரசு பாதுகாப்புத் தோல்வியைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்தன.

நவம்பர் 21 – இலங்கையில் வரி சுமை அதிகரிப்பு, பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் ஒழுங்கின்மை காரணமாக அதிபர் அனுர குமார திசநாயக்க அரசிற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன.

டிசம்பர் 15 – கட்டி தோல் நோய் (Lumpy Skin Disease) பாதிக்கப்பட்ட கால்நடைகளைக் கொல்ல வேண்டும் என்று பிரான்ஸ் அரசு உத்தரவிட்டது. வெளிநாட்டு இறக்குமதிகளை அனுமதிக்கும் EU-Mercosur வர்த்தக ஒப்பந்தத்தையும் கையெழுத்திட்டது பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோனின் அரசு. இந்த இரண்டுமே விவசாயிகளைப் பாதிக்கும் என்பதால் மக்கள் வீதியில் இறங்கிப் போராடினர்.

வங்கதேச போராட்டம்
வங்கதேச போராட்டம்

டிசம்பர் – கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தை முன்னெடுத்த மாணவர் தலைவர் இறப்பிற்கு பிறகு, வங்கதேசத்தில் மீண்டும் வன்முறைகள் வெடித்துள்ளன. மாணவர் தலைவர் இறப்பிற்கு இந்தியாவைக் குற்றம் சாட்டுகின்றனர் போராட்டக்காரர்கள்.

.

இன்னும் சில நாடுகளிலும் போராட்டங்கள் நடந்தன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *