2026ல் வீட்டுவசதி கணக்கெடுப்பு; 2027ல் சாதிவாரி, மக்கள் தொகை கணக்கெடுப்பு – மத்திய அரசு தகவல்! | India Confirms Caste-Based Census to Begin in April 2026, Says Home Ministry

Spread the love

ஜம்மு – காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் லடாக் ஆகிய பனிப்பொழிவு உள்ள பகுதிகள் செப்டம்பர் – அக்டோபர் 2026-ல் கணக்கெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து, ராகுல் காந்தி ‘மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான கேள்விகளின் வரைவை வெளியிட்டு, பொதுமக்கள் அல்லது மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளைப் பெற அரசு திட்டமிட்டுள்ளதா?’ என எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ராய், “2027-ம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான கேள்விகள் தொகுப்பை இறுதி செய்யும் பணியில் இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் இருக்கிறது” என்று பதிலளித்தார்.

இந்திய மக்கள் தொகை

இந்திய மக்கள் தொகை

மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், “இந்த ஆண்டு (2025) ஏப்ரல் 30-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் முடிவின்படி, இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும்,” என்று உறுதியளித்திருக்கிறார்.

மேலும் ஒரு பதிலில் அவர், “2027-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் நடத்தப்படும். இதில் தரவுகள் அனைத்தும் மொபைல் செயலிகள் மூலம் சேகரிக்கப்படும். அத்துடன், சுயமாகக் கணக்கெடுக்கும் வசதி (Self-enumeration) ஆன்லைன் மூலமாகவும் வழங்கப்படும்,” என்றும் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *