2026-ம் ஆண்டை “உலோகங்களின் ஆண்டு’ என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அந்தளவிற்கு இந்த ஆண்டு உலோகங்களின் மதிப்பு தாறுமாறாகப் போகும் என்று நம்பப்படுகிறது.
மேலும், கடந்த சில மாதங்களாக, தங்கம், வெள்ளி உடன் காப்பரையும் (Copper) கவனியுங்கள் என்ற குரல்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.

“2024, 2025-ம் ஆண்டுகளின் காலகட்டத்தில் வெள்ளி புதிய தங்கமாக இருந்தது. இப்போது காப்பர் புதிய தங்கம் என்று கூறப்படுகிறது. இதற்கான வாய்ப்புகளும் உள்ளது தான்.
எலெக்ட்ரிக் சாதனங்கள், சிப், செமி கண்டக்டர்… என பல பொருள்களில் காப்பர் பயன்படுத்தப்படுகிறது. தங்கம், வெள்ளி ஆபரணங்களில் கூட, காப்பர் பயன்படுத்தப்படுகிறது.
தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது… ஏ.ஐ பெரும் பாய்ச்சலுடன் இருக்கிறது… ஆக, இப்போது காப்பருக்கு நல்ல மவுசு உள்ளது.