2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி கூட்டணி அமைப்பேன்: மகளிர் பெருவிழா மாநாட்டில் ராமதாஸ் உறுதி | magalir peruvizha maanaadu in mayiladuthurai

1372617
Spread the love

மயிலாடுதுறை: 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்​றிக் கூட்​டணி அமைப்​பேன் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார்.

மயி​லாடு​துறை மாவட்​டம் பூம்​பு​காரில் வன்​னியர் சங்​கம் சார்​பில் 8-வது மகளிர் பெரு​விழா மாநாடு நேற்று நடை​பெற்​றது. தலைமை வகித்து பாமக நிறு​வனர் ராம​தாஸ் பேசி​ய​தாவது: கங்​கை​கொண்ட சோழபுரத்​துக்கு வந்த பிரதமர் மோடி, தந்​தையை மிஞ்​சிய தனயன் இருக்​கக்​கூ​டாது என்று கூறி, கங்​கை​கொண்ட சோழபுரம் கோயிலை உதா​ரண​மாக காட்​டி​னார்.

தமிழகத்​தில் 10.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டுக்​காக பெரிய போராட்​டம் நடத்த தயா​ராக இருக்​கிறோம். எனவே, சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்​த​வும், வன்​னியர்​களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்​கீடு வழங்​க​வும் முதல்​வர் முன்வர வேண்​டும். சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்​தி​னால், தமிழகத்​தில் உள்ள 320 சமு​தா​யங்​களின் மக்​கள் நிலை தெரிய​வரும். அதை செய்ய முதல்​வர் ஏன் தயங்​கு​கிறார்? மிக​வும் பிற்​படுத்​தப்​பட்​டோருக்கு 20 சதவீத இடஒதுக்​கீட்டை கருணாநிதி கொடுத்​தார். அதனால், 108 சமு​தாய மக்​கள் பயன்​பெற்​றனர். சாதி​வாரி கணக்​கெடுப்பை நடத்​தி, சரித்​திரத்​தில் இடம்​பெறு​மாறு முதல்​வரை கேட்​டுக்​கொள்​கிறேன்.

மது, கஞ்சா விற்​பவர்​களைப் பிடித்து பொது​மக்​கள் போலீ​ஸாரிடம் ஒப்​படைக்க வேண்​டும். மது விற்​பனைக்கு எதி​ரான போராட்​டத்​துக்கு அழைத்​தால், நான் நிச்​ச​யம் கலந்​து​கொள்​வேன். 2026-ல் மக்​கள் விரும்​பும் வகை​யில் வெற்​றிக் கூட்​டணி அமைப்​பேன். வேறு யார் எது சொன்​னாலும் நீங்​கள் கேட்க வேண்​டிய​தில்​லை. நான் சொல்​வது​தான் நடக்​கும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “வரும் 17-ம் தேதி நடை​பெறும் பாமக பொதுக்​குழுக் கூட்​டத்​தில் விவா​தித்​து, கட்​சி​யினரின் கருத்​துகளைக் கேட்​டறிந்த பின்​னர் கூட்​டணி குறித்து முடிவு செய்​யப்​படும். இப்​போதைக்கு எது​வும் சொல்ல முடி​யாது” என்​றார். நிகழ்ச்​சி​யில், ராம​தாஸ் மனைவி சரஸ்​வதி அம்​மை​யார், மகள் காந்​தி, பேரன் சுகந்​தன், மாநாட்​டுக் குழுத் தலை​வரும், வன்​னியர் சங்க மாநிலத் தலை​வரு​மானபு.​தா.அருள்​மொழி, பாமக கவுர​வத்தலை​வர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்​து​கொண்​டனர்.

மாநாட்டு முகப்​பு, மேடை​யில் அன்​புமணி படம் இடம்​பெற​வில்​லை. ராம​தாஸ், அவரது மனைவி சரஸ்​வ​தி, காடு​வெட்டி குரு மற்​றும் வன்​னியர் சங்க சின்​னம் ஆகிய படங்​கள் மட்​டுமே இடம் பெற்​றிருந்​தன.

14 தீர்​மானங்​கள் நிறைவேற்​றம்: பெண்​களுக்​கான நாடாளு​மன்ற சட்​டத்தை உடனடி​யாக நிறைவேற்ற வேண்​டும். பாலியல் வன்​கொடுமை​களுக்கு எதி​ராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்​டும். பூரண மது​விலக்கு கொள்​கையை அமல்​படுத்த வேண்​டும். வன்​னியர்​களுக்​கான 10.5 சதவீத உள் இடஒதுக்​கீட்டை நடை​முறைப்​படுத்த வேண்​டும். சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்த வேண்​டும் என்பன உள்​ளிட்ட 14 தீர்​மானங்​கள் மாநாட்​டில் நிறைவேற்​றப்​பட்​டன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *