2026-ம் ஆண்டும் தங்கம், வெள்ளி, காப்பர் விலை உயரும்; காரணம் என்ன?|Gold Hits ₹1 Lakh! Will Silver and Gold Shine More in 2026?

Spread the love

இந்த ஆண்டு தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையுமே மிக மிக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டின் 1-ம் தேதி, சென்னையில் 1 பவுன் தங்கம் ரூ.57,200-க்கு விற்பனையானது. சமீபத்தில், இது ரூ.1 லட்சத்தைக் கூட தாண்டியது. இந்த ஆண்டின் தொடக்க நாளில் ரூ.98 ஆக இருந்த ஒரு கிராம் வெள்ளியின் விலை, தற்போது ரூ.226.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

“2026-ம் ஆண்டும் தங்கம், வெள்ளி, காப்பர் போன்ற உலோகங்களின் விலை உயரும் என்கிற எதிர்பார்ப்பு சந்தையில் இருக்கிறது.

இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு.

ஒன்று, இந்த உலோகங்களுக்கு தொழிற்சாலைகளில் தொடர்ந்து டிமாண்ட் இருந்து வருகிறது.

இரண்டாவது, உலோகங்களை முதலீட்டாளர்கள், டிரேடர்கள், ஏற்றுமதியாளர்கள் பதுக்கி வருகிறார்கள்.

மூன்றாவது, மக்கள் ஃபியட் நாணயங்களின் மீது நம்பிக்கை இழந்து உலோக முதலீடுகள் பக்கம் திரும்பியுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *